நவம்பர் 17: கூகுளில் இடம் பெற்ற இந்தியச் சிறுமியின் சாதனை !!
குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு கூகுள் நிறுவனம் நடத்திய போட்டியில் புனேவைச் சேர்ந்த சிறுமி வரைந்த ஓவியமானது இடம்பெற்றுள்ளது. குழந்தைகள் தின விழவானது இன்று பள்ளிகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கூகுள் நிறுவனம் நடத்திய விளையாட்டு போட்டியில் புனேவைச் சேர்ந்த காயத்ரி கேத்தாராமன் (15) என்ற சிறுமி ‘இந்திய பெண்கள்’ என்ற தலைப்பில் பெண்கள் சாதிக்கும் துறைகள் பற்றி அழகிய ஓவியம் ஒன்றினை வரைந்து பரிசினை தட்டிச்சென்றுள்ளார்.
இவர் வரைந்துள்ள ஒவியத்தில் கூகுளில் உள்ள முதல் ‘G’ என்ற எழுத்து பரதநாட்டிய பெண்மணியின் ஆளுமை திறமையையும், இரண்டாவது ‘G’ என்ற எழுத்து ராக்கெட்டில் விண்வெளிப் பயணம் செய்த பெண்ணின் வீரத்தையும் குறிப்பிடுகின்றது.
இதுகுறித்து காயத்ரி கூறுகையில், இந்த ஓவியத்தினை வரைவதற்கு ஒரு வாரம் தேவைப்பட்டது. ஆனால் இந்தியப் பெண்களை சித்தரிக்கவும், பெண்களின் ஆளுமை அதிகாரத்தை வெளிப்படுத்தும் கருத்தினை சிந்திப்பதற்கு பல வாரங்கள் தேவைப்பட்டது என்று கூறியுள்ளார்.
மேலும் இச்சிறுமிக்கு ‘குரோம் புக் மடிக்கணனி’ பரிசாக வழங்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் இவர் வரைந்த ஒவியம் கூகுள் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.
No comments:
Post a Comment