அக்டோபர் 26: நிச்சயிக்கப்பட்ட நபருடன் பேசியதால் சிறுமி கௌரவக் கொலை.
ஏமன் நாட்டிலுள்ள ஒரு சமூகத்தினர் ஒரு வித்தியாசமான நடைமுறையை பின்பற்றி வருகிறார்கள். திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் இரகசியமாக பேசவோ, பழகவோ கூடாது. இந்நிலையில் அங்குள்ள ஷாபாப் கிராமத்தில் 15 வயது சிறுமிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
ஆனால் திருமணம் நடக்கும் முன்பே அவள் தனது வருங்கால கணவருடன் தொலைபேசியில் உரையாடுவதை தந்தை பார்த்து விட்டார். இதன் விளைவு மகள் என்று கூட பார்க்காமல் அவளை எரித்துக்கொன்று விட்டார். 35 வயதாகும் தந்தை இப்போது போலிஸிசில் பிடியில் சிக்கி விட்டார்.
இதுபோன்ற கௌரவ கொலைகள் அங்கு சர்வசாதாரணமாக நடப்பதால் அதை தடுத்து நிறுத்த மனித உரிமை ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள்.
No comments:
Post a Comment