அக்டோபர் 26: முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை தர்ஹா அருகில் உள்ள ஜீவானந்தம் என்பவரின் அனுபவத்தில் உள்ள இடத்தில் பூமிக்கடியிலிருந்து சூலாயுதம் வந்ததாக பரபரப்பானது.
யாரோ விஷமிகள் தூண்டுதலின் பேரில் அந்த இளைஞர் வேண்டுமென்றே அந்த இடத்தில் சூலாயுதத்தை வைத்துவிட்டு தானாக வந்ததாக நாடகமாடி பிரச்சனையை தூண்டி வருகிறார்.
இதனால் நேற்று (25-10-2013) அஸர் தொழுகைக்கு பிறகு முத்துப்பேட்டை அரபு சாஹீப் பள்ளிவாசல் மதராஸவில் முத்துப்பேட்டை முஸ்லிம் ஜமாத் ஒருகினைப்பாளார் S.S.பாக்கர் அலி அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.
இதில் முத்துப்பேட்டை அனைத்து ஜமாத் நிர்வாகிகள், தமுமுக , SDPI , TNTJ ,முஸ்லிம் லீக் மற்றும் ஊர் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.
தீர்மானங்கள்
1. வருகின்ற 28.10.2013 மாவட்ட ஆட்சியர்களிடம் மனு கொடுத்து சூலாயுதம் வந்ததாக கூறியவர் பாண்டியன் கைது செய்து அவர்களை விசாரனை செய்ய வேண்டும்.
2. பாண்டியனை கைது செய்யவில்லை என்றால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெறும்.
3. இனி வரும் காலங்களில் ஊரில் எந்த பிரச்சனையாக இருந்தால் இதை போல ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.
தகவல்: முத்துப்பேட்டை பைசல்
No comments:
Post a Comment