அக்டோபர் 01: முத்துப்பேட்டை ஆசாத்நகரில் அக்பர் அலி என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை அந்த கடைக்கு வாலிபர் ஒருவர் செல்போன் வாங்குவதற்காக சென்றார். அப்போது பல்வேறு விலை உள்ள செல்போன்களை அக்பர்அலி, அந்த வாலிபரிடம் எடுத்து காட்டினார். அப்போது கடையில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதை பயன்படுத்தி கொண்ட அந்த வாலிபர், கடையில் இருந்த செல்போனை திருடிவிட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றார். இதுகுறித்து அக்பர்அலி முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவித்தார்.
இதன்பேரில் போலீசார் கடைக்கு சென்று விசாரித்தனர். பின்னர் அக்பர்அலி மற்றும் போலீசார் செல்போன் கடைக்கு அருகே செல்போனை திருடிய வாலிபரை தேடினர். இதில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டிருந்த அந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் அவர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராஜா என்கிற ராஜசேகர் (வயது35) என்பதும், முத்துப்பேட்டை பகுதியில் கொத்தனாராக வேலை பார்த்து வந்ததும், அக்பர்அலியின் கடையில் செல்போனை திருடிவிட்டு தப்பி ஓடியதும் தெரியவந்தது. இதையடுத்து அக்பர்அலி கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கொத்தனார் ராஜசேகரிடம் இருந்து திருடப்பட்ட செல்போனை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.
No comments:
Post a Comment