அக்டோபர் 01: முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு, உப்பூர், நொச்சியூர், கோவிலூர், காரைதிடல் பகுதி கோட்டகம் பாசன விவசாயிகளுக்கு தண்ணீர் இல்லாமல் பயிர்கள் காய்ந்து வருகிறது, அதனால் பாமினி ஆறு வடிகாலில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். பொதுபணிதுறை நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த 10 கிராம விவசாயிகள் ஆலங்காடு முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் மோகன் தலைமையில் கிராம கமிட்டி பொறுப்பாளர்கள் ராமநாதன், வைரவநாதன், பாலசுப்பிரமணியன், கோபி ஆகியோர் முன்னிலையில் செரப்பட்டா கரை அருகே உள்ள மன்னார்குடி –முத்துப் பேட்டை சாலையில் மறியலில் ஈடுப்பட்டனர்.
தகவல் அறிந்ததும் முத்துப்பேட்டை பொதுபணிதுறை உதவி செயற் பொறியாளர் சுப்பையன், மற்றும் போலீசார், அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி உடன் தண்ணீர் திறந்நு விடப்படும் என்று உறுதி அளித்ததால் விவசாயிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
No comments:
Post a Comment