செப்டம்பர் 22:உள்நாட்டிலிருந்து (சவூதி அரேபியா) இந்த ஆண்டு ஹஜ்ஜுக்கு செல்பவர்களின் கவனத்திற்கு!
முஸ்லிம்களின் கட்டாயக் கடமைகளில் ஒன்றான ஹஜ் புனித பயணத்தை அதன் ஏற்பாட்டாளர்கள் வியாபாரமாக்கி பல ஆண்டுகளாகிறது. பல்வேறு சந்தர்பங்களில் பல வகைகளில் நாம் கண்டனங்களை பதிவு செய்துள்ளோம்.
இதோ! இந்த ஆண்டிற்கான கவனம் மற்றும் எச்சரிக்கை!!
இந்த ஆண்டு உள்நாட்டிலிருந்து (சவூதி) ஹஜ்ஜுக்கு செல்பவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறுபவர்களை அவர்களது நாட்டிற்கு உடனே திருப்பி அனுப்புவதோடு 10 ஆண்டுகள் சவூதி அரேபியா வர தடை செய்யப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு சவூதி முழுதும் 199 கம்பெனிகளுக்கு மட்டுமே ஹஜ் ஏற்பாட்டிற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதி வழங்கிய ஏற்பாட்டாளர்கள் அல்லாதவர்களிடம் பணம் கொடுத்து யாரும் ஏமாந்து விடவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.
தாயகத்திலிருந்து சுற்றுலா விசாவில் இங்கு அழைத்துள்ள உங்கள் உறவினர்களை கண்டிப்பாக ஹஜ் அழைத்துச் செல்ல முயற்சிக்காதீர்கள்.
முறையான அனுமதிக்கப்பட்ட ஆவணங்கள் இல்லாமல் ஹஜ் பயணம் மேற்கொள்ளாதீர்கள்.கடுமைய பரிசோதனைச் சாவடிகள் ஏற்பாடுத்தப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. மேலும் சட்ட விதிகளை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
போலி ஏற்பாட்டாளர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment