செப்டம்பர் 19: கண்ணியத்திற்குரிய ஜமாஅத் தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
உத்திரப்பிரதேசம் மாநிலம் முஸாஃபர் நகர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி தொடங்கி நடைபெற்ற கலவரத்தில் 100க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் வியாபார நிறுவனங்கள் மற்றும் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. 70,000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் சொந்த மாநிலத்திலேயே அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் கே.எம். ஷரீஃப் அவர்கள் தலைமையிலான குழு செப்டம்பர் 16 அன்று நேரில் சென்று கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினர். பாதிக்கப்பட்ட நம் சமுதாய சொந்தங்களுக்கு தேவையான நிவாரணங்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உத்திரப்பிரதேசத்தில் செய்து வருகின்றது. கலவரத்தில் பாதிக்கப்பட்டு தங்கள் வீடுகளை இழந்து அகதிகள் முகாம்களில் உள்ள முஸ்லிம்களின் நிவாரணத்திற்கு வேண்டி பாப்புலர் ஃப்ரண்டின் சார்பாக வெள்ளிக்கிழமை ஜூம்ஆவில் நிதி வசூல் செய்து அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வரக்கூடிய ஜூம்ஆ (20.09.2013) அன்று பாதிக்கப்பட்ட நம் சகோதர முஸ்லிம்களுக்கு உதவி செய்ய பள்ளியில் அறிவிப்பு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
இப்படிக்கு
ஏ.ஹாலித் முஹம்மது
மாநில பொதுச் செயலாளர்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
No comments:
Post a Comment