திருச்சியில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் திடீர் கோளாறு 186 பயணிகள் உயிர் தப்பினர். - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Tuesday, September 3

திருச்சியில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் திடீர் கோளாறு 186 பயணிகள் உயிர் தப்பினர்.


செப்டம்பர் 03: திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு  தினமும் காலை 8.20 மணிக்கு ஏர்இன்டியா எக்ஸ்பிரஸ் (Air India Express) விமானம் இயக்கப்படுகிறது. இந்த விமானம் நேற்று காலை புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 186 பயணிகள் இருந்தனர். ஆனால் விமானம் புறப்படவில்லை. காரணத்தையும் தெரிவிக்காததால், பயணிகள் பணிப்பெண்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து விமானத்தில் சிறிய தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது, பழுது பார்ப்பதாக கூறினர். இதனால் பயணிகள் கீழே இறங்கி நிலைய மேலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் 12 மணியளவில் பழுது நீக்கப்பட்டதாக கூறிவிமானம் புறப்பட்டது. ரன்வே நோக்கி சென்றுவிட்டு மீண்டும் வந்து நின்றது. இதனால் பயணிகள் மேலும் ஆத்திரமடைந்தனர். பின்னர் மாற்று விமானம் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், இரவு 7 மணிக்கு புறப்படும் என கூறி அனைவரையும் மீண்டும் விமான நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here