செப்டம்பர் 05: முத்துப்பேட்டை அருகே உள்ள எடையூர் சிவராம நகரை சேர்ந்தவர் சக்திவேல் (40). கூலி தொழிலாளி. இவரது மனைவி மகேஸ்வரி (35). இந்தநிலையில் சக்தி வேலுக்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் தினமும் மது குடித்துவிட்டு வந்து, குடும்பம் நடத்த பணம் கொடுக்காமல் மனைவி மகேஸ்வரியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதே போல் நேற்றும் மதுகுடித்து விட்டு போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது கணவனுக்கும் மனைவிக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் கைகலப்பாக மாறி ஒருவருக்கொருவர் மாறி மாறி அடித்துக் கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த மகேஸ்வரி வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் அரிவாளை எடுத்து கணவர் சக்திவேலின் தலை, இடது கை போன்ற இடங்களில் சரமாரியாக வெட்டினார்.
இதில் காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக எடையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மகேஸ்வரியை கைது செய்தனர்.
No comments:
Post a Comment