ஆகஸ்ட் 21: இந்தியாவின் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுள் ஒன்றானதும், ஆயிரக்கணக்கான கிளைகளை நாடெங்கிலும் கொண்டுள்ளதுமான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தனது இணைய முனையத்தில் (செர்வர்) ஏற்பட்டுள்ள தொழிற்நுட்பக் கோளாறு காரணமாக தனது பணிகளில் இரண்டாம் நாளாக முடக்கம் கண்டுள்ளது.
நேற்றிலிருந்து இந்தச் சிக்கல் காரணமாக வங்கியில் பணப்பரிமாற்றம் நடைபெறவில்லை. நேற்று காலை இப்பழுது ஏற்பட்டது முதல் மாலை வரை சரி செய்யப்படாததால் பணம் இருப்பு செய்யவோ, எடுக்கவோ முடியவில்லை. பணப்பரிமாற்றம், வங்கி காசோலை பரிமாற்றம் போன்ற சேவைகள் பெற இயலாமல் பெருமளவில் வாடிக்கையாளர்கள் பாதிப்படைந்தனர்.
இன்று 2-வது நாளாக இந்தச் சிக்கல் நீடித்து வருகிறது. வங்கிக்கு சென்ற வாடிக்கையாளர்கள் பணபரிமாற்றம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிவருகிறார்கள்.
இந்தியாவின் தேசியமயமாக்கப்பட்ட பெரும் வங்கி ஒன்றில் இத்தகைய கோளாறுகள் ஏற்படுவது இந்தியாவின் தொழிற்நுட்பியல் வலிமையை கேலிக்குரியதாகவும், கேள்விக்குரியதாகவும் ஆக்குவதாக வங்கி வாடிக்கையாளர் ஒருவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment