அஸ்ஸலாமு அலைக்கும்
மரண அறிவிப்பு
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை சேர்ந்த காஜா அலாவுதீன் மற்றும் நபிஸா பீபி ஆகியோரின் மகனாரான குலாம் ரசூல் குவைத்தில் கருப்பு ஜெலிப் பகுதியில் வீட்டு டிரைவராக பணி புரிந்து வந்தார் .இவரது மனைவியின் பெயர் ரசூல் கனி ஆவார்
சென்ற வெள்ளிகிழமை (02 .08 .2013) தனது அரபியிடம் விடுமுறை கேட்டு விட்டு தொழுகைக்காக தமிழில் நடை பெறும் ஜும்மா பள்ளிவாசலுக்கு வர தயாராவதற்காக குளித்து விட்டு பாத்ரூமை விட்டு வெளியே வந்த அடுத்த நொடியில் நெஞ்சு வழி ஏற்ப்பட்டு அந்த இடத்திலேயே வபாத்தாகி விட்டார் .
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..
அன்னாரது மஃபிரத்துக்கும் மறுமை வெற்றிக்கும் அல்லாஹ்வின் பொறுத்தம் பெறவும் துஆ செய்வதுடன்,
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன்,
அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார்களுக்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோமாக
ஜனாசா தொழுகை அறிவிப்பு
இன்ஷா அல்லாஹ் வரும் புதன் கிழமை அசர் தொழுகைக்கு பிறகு சுலைபிகாத் மையவாடியில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட உள்ளது
ஆதலால் குவைத் வாழ் தமிழ் பேசும் மக்கள் அன்னாரின் ஜனாசா தொழுகையில் கலந்து கொண்டு இவர்மறுமையில் சுவனபதியில் நுழையவும் இவரின் கபூர் வேதனைகள் நீங்கவும் தூ ஆ செய்வோம்.
- தகவல் குவைத்திலிருந்து நெல்லை பீர் மரைக்காயர்
No comments:
Post a Comment