அங்கீகரிக்கப்படாத VOIP CALL விற்பனை செய்த ஐந்து இந்தியர்கள் கைது! - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Saturday, June 22

அங்கீகரிக்கப்படாத VOIP CALL விற்பனை செய்த ஐந்து இந்தியர்கள் கைது!


ஜுன் 22: சவூதி அரேபியா ஜித்தாவில் இணையம் மூலம் தொலைபேசி உபயோகிக்கும் அங்கீகரிக்கப் படாத VOIP CALL அட்டைகள் விற்பனை செய்த ஐந்து இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

"VOIP CALL'' என அழைக்கப்படும் மிகவும் குறைந்த விலையில் உபயோகிக்கக் கூடிய இந்தவகை தொலைபேசி மென்பொருள்களை, தங்களது ஸ்மார்ட் போன்களிலோ அல்லது கணினிகளிலோ தரவிறக்கம் செய்து அதன் மூலம் வெளிநாடுகளுக்கு பேசலாம்

சவூதியில் தடை செய்யப்பட்ட இவ்வகை தொலைபேசி அட்டைகள் விற்பனை செய்த ஐந்து இந்தியர்கள் சவூதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் சுமார் 23,000 சவூதி ரியால் மதிக்கத்தக்க அங்கீகரிக்கப்படாத தொலைபேசி அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகளைச் சேர்ந்த வளைகுடா நாட்டினர் இணையம் மூலம் இவ்வகை தொலைபேசி மென்பொருள்களை உபயோகப்படுத்தி போன் பேசி வந்த வேளையில், துபை, கத்தார், பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட நாடுகளில் ஏற்கனவே இவ்வகை இணைய தளங்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் BSNL உள்ளிட்ட தொலைபேசி நிறுவனங்கள் இது போன்ற VOIP CALL இணைய தளங்கள் மூலம் போன் பேச அனுமதி வழங்கவில்லை என்பதும், இத்தகைய தளங்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here