மே 02: முத்துப்பேட்டை கல்வி பேரவையின் புதிய கட்டிட திறப்பு விழா, 14ம் ஆண்டு துவக்க விழா மற்றும் மக்கள் சேவை மையத்தின் துவக்க விழா ஆகியவைகள் 01.05.2013 புதன் கிழமை மஃரிப் தொழுகைக்குப்பின் ஆரம்பிக்கப்பட்டது.
குத்பா பள்ளி வாசல் இமாம் மௌலவி, அஹமது ஜலாலுதீன் அவர்கள் கிராஅத் ஓத, வரவேற்புரையினை ஜனாப். கே. ரெஜாக்கான் அவர்கள் நிகழ்த்த, நிகழ்ச்சி தொகுப்பினை ஜனாப் பி.ஹெச். அப்துல் ஹமீது (தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்) அவர்கள் மேற்கொண்டார்.
கல்வி பேரவை தொடக்க கால தலைவர் ஏ.கே.எல்.எல். மன்சூர் அவர்கள் முன்னுரையில் பேசும் போது, இளைய சமுதாயத்தினை நல்வழிப்படுத்தக்கூடிய நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது முத்துப்பேட்டை கல்வி பேரவை. தற்போது முத்துப்பேட்டையில் பட்டதாரிகள் இல்லாத வீடுகள் மிகவும் அரிது எனலாம். இதன் தொடர்ச்சியாக முத்துப்பேட்டையில் ஒரு பல்கலைக்கழகம் உருவாவதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும்.
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர், ஹாஜி. எம். அப்துல் ரஹ்மான் அவர்கள் வாழ்த்துரையில் பேசும் போது.. ‘மாணவர்கள், மாணவிகள், இளைஞர்கள் எல்லாத்துறையிலும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த கல்வி பேரவை. இறைவனின் திருப்பொருத்தத்தை மட்டுமே பெற வேண்டும் என்ற உரிய நோக்கில் சகோதரர். முஸ்தபா அவர்கள் தன்னுடைய பணியினை மிகச்சிறப்பாக செய்து வருகிறார்கள். கல்வி பேரவையின் வளர்ச்சிக்கு நானும் ஒரு சிறு துரும்பாக இருந்து வருகிறேன். அதுபோல் இந்த கல்வி பேரவையின் வளர்ச்சிக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்’ என்றார்.
வாணியம்பாடி பேராசியர், முனைவர். தி.மு. அப்துல் காதர் அவர்கள் சிறப்புரையில் பேசுகையில், கடந்த 13 ஆண்டுகளாக கல்வி பணி, கணினி பயிற்சி ஆகியவற்றை திறன்பட செய்து வந்த முத்துப்பேட்டை கல்வி பேரவை தற்போது 14ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. ஆற்றல் உள்ள பணிகள், அரிய பணிகள் மாணவ செல்வங்கள் பெறுவதற்கு முத்துப்பேட்டை கல்வி பேரவை ஒரு வழிகாட்டியாக உள்ளது. இளைய செடிகளுக்கு வேராக கல்வி பேரவையானது இருக்கும் என்றார்.
நிகழ்ச்சியில், கல்வியில் சாதனை புரிந்தவர்களான எஸ். ஐனுல் மர்லியா, எஸ். முகம்மது இம்தியாஸ், கே. சதாம் உசேன், இப்ராம்ஷா – ரபியா தம்பதியர் ஆகியோருக்கு ஊக்கப்பரிசும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
NEWS PARTNER MUTHUPET.ORG
மென்மேலும் சேவைகள் தொடர வாழ்த்துக்கள்.....
ReplyDelete