முத்துப்பேட்டை மருதாங்காவெளியில் தீ விபத்து. - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Friday, December 14

முத்துப்பேட்டை மருதாங்காவெளியில் தீ விபத்து.


டிசம்பர் 14: முத்துப்பேட்டை – மருதாங்காவெளி – இரயில்வே லைன் பகுதி – கால்நடை மருத்துவமனை பின்புறம் உள்ள பகுதியில் 13.12.2012 மதியம் 1.45 மணியளவில் ஒரு வீட்டிலிருந்து ஏற்பட்ட தீ பொறி பக்கத்தில் உள்ள மூன்று வீடுகளை முற்றிலும் நாசம் செய்து உள்ளது.
புவனேஸ்வரி என்பவர் (வயது 38) மதியம் வேளையில் சமையல் செய்துக்கொண்டு இருக்கும் போது எதிர்பாராவிதமான ஏற்பட்ட தீ மடமடவென அடுத்த அடுத்த வீடுகளுக்கு பரவி அந்த வீடுகளில் இருந்த அனைத்து பொருட்களும், குறிப்பாக அரசாங்க சம்மந்தப்பட்ட குடும்ப அட்டை, மற்றும் பள்ளிக்கூட சான்றிதழ், பாஸ்போர்ட் என்று அனைத்தும் எரித்தன.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களின் விவரங்கள் :
1. கே. தங்கப்பா (வயது – 50), தந்தை பெயர் குமரன் (வயது 72)
2. வ. புவனேஸ்வரி (வயது – 38), கணவர் பெயர் வடுகநாதன் (வயது 45)
3. மகேஸ்வரி (வயது 32) 
இச்சம்பவத்தில் உயிர்ச்சேதம் ஏதுவும் ஏற்படவில்லை, புவனேஸ்வரி என்பவரின் ஆண் குழந்தை கதிர் (வயது 2 மாதம்) உயிர் காப்பாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தீயணைப்பு வீரர்கள் மற்றும் அங்கு இருந்த பொது மக்கள் தீயினை அணைத்ததால் தீ அதிகமான அளவில் பரவாமல் தடுக்கப்பட்டது. மற்றும் சம்பவ இடத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் ராஜராஜ சோழன், ஆர்.ஐ. ராமச்சந்திரன், 1 வது வார்டு உறுப்பினர் கே. மாரிமுத்து, கோ. அருணாச்சலம் – பேரூராட்சி தலைவர், அப்துல் வஹாப் – துணைத்தலைவர் ஆகியோர்கள் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மற்றும் மாலை 5 மணியளவில் திருத்துறைப்பூண்டி தாசில்தார் சு. வைத்தியநாதன் அவர்களும் வந்து பாதிக்கப்பட்ட மூன்று குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறி முதல் கட்ட நிவாரண தொகை, புடவை, வேஷ்டி, பாதிக்கப்பட்ட குடும்பத்தில் உள்ள சிறார்களுக்கு உடுத்துவதற்கு ஆடை ஆகியவற்றை வழங்கினார்கள்.








NEWS PARTNER MUTHUPET.ORG

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here