டிசம்பர் 10:பொருளாதாரப் பின்னடைவினை முன்னிட்டு, இந்த ஆண்டில் (2012), உலகளவில் முன்னணி நிறுவனங்களிலிருந்து சுமார் ஒரு இலட்சம் பேர் வேலை இழந்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. செலவினம் குறைத்தல் என்னும் யோசனையின் படி இந்த ஒரு இலட்சம் பணி நீக்கம் நடைபெற்றுள்ளது.
சர்வதேச அளவில் பெரிய நிறுவனங்களான கூகுள், சிட்டி குரூப், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், ஏ.எம்.ஆர். கார்ப்பரேஷன், பெப்சி, மெட் லைஃப், ஹோஸ்டஸ் பிராண்ட்ஸ், ஜே.சி. பென்னி, புரோக்டர் அன்ட் கேம்பிள், மற்றும் மோர்கன் ஸ்டான்லி ஆகியவை இவ்வாறு ஊழியர்களை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்த நிறுவனங்களுள் அடங்கும்
ஹெச்.பி எனப்படும் ஹவ்லெட் ப்பெக்கார்டு நிறுவனம் சுமார் 27,000 பேரை நிரந்தரமாக நீக்கி, பட்டியலில் முதலிடம் பிடிக்கிறது. பிரபலமான கூகுள் நிறுவனம் அமெரிக்காவுக்கு வெளியே சுமார் 4,000 பேருக்கு வேலை மறுப்பு ஓலை (பிங்க் நோட்டீஸ்) கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment