நவம்பர் 30: முத்துப்பேட்டை – அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இரு தரப்பு மாணவர்களுக்கிடையே மோதல் அடிக்கடி நடைபெறுவது வழக்கமாக ஒன்றாக போய் விட்டது. மாணவர்கள் படிப்பதற்கு பள்ளிக்கூடம் செல்வதில்லை, ஏதேனும் காரணங்களை சொல்லி அங்கு பிரச்சனைகளை உண்டாக்கி பெற்றோர்களுக்கும் மற்றவர்களுக்கு மனக்கசப்பினை ஏற்படுத்தி வருகிறார்கள்.
29.11.2012 வியாழன் மாலை 12 மணியளவில் இரு தரப்பு மாணவர்களுக்கிடையே வாக்குவாதம் நடைபெற்று அது கைகலப்பாக மாறி, இரண்டு தரப்பு மாணவர்களும் விளையாட்டு மைதானத்தில் சண்டை போட ஆரம்பித்து விட்டனர்.
ஒரு தரப்பு மாணவர்கள் 30.11.2012 வெள்ளிக்கிழமை காலை பள்ளிக்கூடம் சென்று இருக்கிறார்கள். அங்கு மற்ற தரப்பு மாணவர்கள் சண்டை போடும் நோக்கில் தயாராக இருந்து உள்ளனர். அதனைக்கண்ட சில மாணவர்கள் காவல் நிலையம் சென்று புகார் அளித்து இருக்கிறார்கள். புகாரை என்றுக்கொண்ட காவல் துறையினர் விரைவில் விசாரணை நடக்கும் என்று உறுதி அளித்து உள்ளார்கள். இருப்பினும், ஒரு தரப்பு மாணவர்கள் இது அதிருப்தி அளிப்பதாக சொல்லி உள்ளார்கள். எங்களை அடித்த மாணவர்களை கைது செய்ய வேண்டும், மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை கையில் எடுத்து உள்ளார்கள் ஒரு தரப்பு மாணவர்கள்.
இந்த பிரச்சனையினை கேள்விப்பட்ட மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் முஹம்மது மாலிக் மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் செயற்குழு உறுப்பினர் அபு பக்கர் சித்திக் ஆகியவர்கள் காவல் நிலையம் வந்து மாணவர்களின் பிரச்சனையை பற்றி விசாரித்தார்கள்.
முத்துப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அடிக்கடி நடைபெறும் மாணவர்களின் மோதலுக்கு பள்ளியின் நிர்வாகத்தின் அலட்சிப்போக்கு அவர்களின் திறமை இல்லாத நிர்வாகம் என்று பொது மக்கள் கருத்து தெரிவித்து உள்ளார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
NEWS PARTNER MUTHUPET.ORG
No comments:
Post a Comment