செப்டம்பர் 17: மத உணர்வுகளையும், நம்பிக்கையையும் காயப்படுத்தும் அனைத்து செயல்களுக்கும் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இஸ்லாத்தை அவமதிக்கும் திரைப்படக் காட்சிகள் யூ ட்யூபில் வெளியானதைத் தொடர்ந்து லிபியாவில் அமெரிக்க தூதர் கொலைச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இறைத்தூதரை அவமதிக்கும் சர்ச்சைக்குரிய திரைப்படம் குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் இந்திய அதிகாரிகள் தொடர்புக்கொண்டுள்ளதாக வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவின் நிலைப்பாட்டை அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஸய்யித் அக்பருத்தீன் தெரிவித்துள்ளார். கொந்தளிப்பை உருவாக்கும் வீடியோக்களையும், படங்களையும் இணையதளத்தில் காணக்கிடைப்பதை தடுக்க கூகிள் இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இஸ்லாத்திற்கு எதிரான திரைப்படத்தின் காட்சிகள் யூ ட்யூபில் வெளியானதைத் தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் முஸ்லிம்கள் கொதித்துப் போனார்கள். பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்தியாவில் தென்னக மாநிலமான தமிழ்நாடு உள்பட பல்வேறு பகுதிகளில் கண்டனப் போராட்டங்கள் நடந்தன.
இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படத்திற்கு இந்தியாவில் தடை!
இஸ்லாத்தின் இறுதித்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களை இழிவுப்படுத்தும் அமெரிக்க திரைப்படத்திற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் யூ ட்யூபில் இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படத்தின் காட்சிகளுக்கு தடை விதிக்க கூகிள் இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஸய்யித் அக்பருத்தீன் கூறியுள்ளார்.ஆனால், தற்போதும் யூ ட்யூபில் இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படத்தின் காட்சிகள் தெரிவதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment