இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மத்திய சர்வரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வங்கி சேவை முடங்கியது - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Saturday, September 1

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மத்திய சர்வரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வங்கி சேவை முடங்கியது


செப்டம்பர் 01: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சேவை இன்று நாடு முழுவதும் முடங்கியது. மத்திய சர்வரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வங்கி பணிகள் பாதிக்கப்பட்டன. கம்ப்யூட்டர் செயல் இழந்ததால் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சேவை பாதித்தது. 

இதனால் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாமலும், செலுத்த முடியாமலும் தவித்தனர். காசோலைகள் பரிமாற்றம் செய்ய முடியவில்லை. சென்னையில் உள்ள அனைத்து கிளைகளிலும் இன்று சனிக்கிழமை என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. வங்கி பணிகள் முடங்கியதால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர். 

இதுகுறித்து வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், மத்திய சர்வரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நேற்று முடிக்க வேண்டிய கணக்குகளை முடிக்க இயலவில்லை. இதனால் இன்று அனைத்து கிளைகளிலும் கம்ப்யூட்டர் செயல்படவில்லை என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here