ஆகஸ்ட் 17:
“அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள். இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள். இன்னும், நன்மை செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான்.”
திருக்குர்ஆன் 2:195
முத்துப்பேட்டை இஸ்லாமிய நலச்சங்கம் MIWA சார்பில் கடந்த 29 ஆண்டுகளாய் ஃபித்ரா அரிசி விநியோகம் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. 17.8.12 காலை 10 மணியளவில் பேட்டை, பக்கிரி வாடித்தெரு, குட்டியார் பள்ளி வாசல் தெரு, புதுப்பள்ளி வாசல் தெரு, அரபு சாகிப் பள்ளி தெரு, துவான் காலணி பகுதி மற்றும் முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள ஏழை வீடுகளை தேடி சார்பில் ஃபித்ரா அரிசி வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஃபித்ரா அரிசி வழங்குதல் நிகழ்ச்சியில் தலைவர் S. ஜெகபர் உசேன், செயலாளர். M.A.K. ஹிதாயத்துல்லா, P.M ஜாகிர் உசேன் – முன்னாள் தலைவர், சோழநாடு கா.மு. நெயினார் முகம்மது, முத்துப்பேட்டை பிரதிநிதிகளான M. ஷாகுல் ஹமீது, M.H சேக் தாவூது, S. ஹீமாயூன் கபீர் மற்றும் பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
முக்கிய செய்தி:வெள்ளி விழா கடந்து பொன் விழாவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் MIWA 30 வது ஆண்டு விழா நிகழ்ச்சி துபாயில் ஹஜ் பெருநாள் முடிந்து அடுத்த நாள் நடைபெற உள்ளது. நடைபெறும் இடம் பின்னர் அறிவிக்கப்படும் என்பதினை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
நன்றி: முத்துப்பேட்டை.org
No comments:
Post a Comment