ஆகஸ்ட் 23: முத்துப்பேட்டையில் எதிர்வரும் 31-08-2012 அன்று முதல் பேரூராட்சி நிர்வாகத்தால் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடைவிதிக்கப்பட்டுள்ள பொருள்களை மைய்யபடுத்தி எல்லா கடைகள் மற்றும் முக்கிய இடங்களிலும் பேரூராட்சி நிர்வாகத்தால் தட்டிகள் தொங்கவிடப்பட்டுள்ளன. இது பொதுமக்களுக்கு மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன. கடை உரிமையாளர்களும், ஊழியர்களும் இதனை கடைபிடிக்க வேண்டுமாய் பேரூராட்சி நிர்வாகத்தினரால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு கொண்டிருக்கிறார்கள். பொதுமக்களும் பொருள்கள் வாங்குவதற்கு செல்லும்பொழுது வீட்டிலிருந்தே பிளாஸ்டிக் பேக் அல்லாத மற்ற பேக்குகளை எடுத்துசெல்லுமாறும் விழிப்புணர்வூட்டப்படுகிறார்கள்.
முத்துப்பேட்டையில் சுகாதார சீர்கேட்டை தடுக்கவும், மக்கிப்போகாத பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் பின்விளைவுகளை உணர்ந்தும் பேரூராட்சி நிர்வாகம் இத்தகைய முடிவை அமுல்படுத்துகிறது. ஆகவே முத்துப்பேட்டை வாசிகள் இதனை நடைமுறைபடுத்துமாறு நமது முத்துப்பேட்டை பிபிசி இணையதளமும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
- செய்தி : முத்துப்பேட்டை முகைதீன், ஆசாத்நகர் பைசல்
தகவல்: www.muthuppettai.com
தகவல்: www.muthuppettai.com
No comments:
Post a Comment