ஜுன் 30: பரபரப்பு மிகுந்த யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின், இத்தாலி அணிகள் நாளை மோத உள்ளன. பலமான இரு அணிகளும் கோப்பையை கைப்பற்ற கடுமையாக போராடும் என்பதால் விறுவிறுப்பிற்கு குறைவிருக்காது.
யூரோ கோப்பை 2012 கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 8ம் தேதி துவங்கிய இத்தொடர், லீக் போட்டிகள், காலிறுதி, அரையறுதி நிலைகளை கடந்து தற்போது இறுதிப் போட்டியை எட்டியுள்ளது.
உக்ரைனில் உள்ள கிவ் நகரில் நாளை நள்ளிரவு நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் ஸ்பெயின், மற்றொரு பலமான அணியான இத்தாலியை எதிர்கொள்கிறது. சி பிரிவை சேர்ந்த இரு அணிகளும், மோதிய லீக் போட்டி வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது.
ஸ்பெயின்:
யூரோ கோப்பையை 2 முறை கைப்பற்றியுள்ள ஸ்பெயின் அணியில் ஷவி ஹெர்னாண்டஸ், ஷபி அலோன்சா, டேவிட் சில்வா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் உள்ளனர். சிறந்த கோல் கீப்பரான, கேப்டன் கேசிலாஸ் எதிரணியினரின் கோல் தாக்குதல்களை தடுப்பதில் கைதேர்ந்தவர்.
இத்தாலி:
இத்தாலி அணியை பொறுத்த வரை இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற பலமான அணிகளை வீழ்த்தி விட்டு, இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளது. இதனால் ஸ்பெயினுக்கு தகுதியான எதிரான அணியாக இத்தாலியை மதிக்க முடியும். இத்தாலி அணியில் மேரியோ பலோடெலி, கேசியானோ, ஆண்டிரியோ பிர்லோ, டிமான்டி போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
யூரோ கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இத்தாலி, ஜெர்மனி என்ற இரு பலத்த அணிகள் மோதுவதால், ரசிகர்களின் விறுவிறுப்பிற்கு குறைவு இருக்காது.
நமது முத்துப்பேட்டை பிபிசி யி்ல் EURO CUP கால்பந்து போட்டி நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது.
No comments:
Post a Comment