ஃபேஸ்புக் டைம்லைன் அப்ளிகேஷனிலிருந்து விடுதலை பெற ஓர் புது வழி! - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Saturday, June 30

ஃபேஸ்புக் டைம்லைன் அப்ளிகேஷனிலிருந்து விடுதலை பெற ஓர் புது வழி!


ஜுன் 30:எங்கே நோக்கினும் விந்தையடா! என்ற வாக்கியத்தை உண்மையாக்க வந்திருக்கிறது ஃபேஸ்புக். ஃபேஸ்புக் உலகம் என்று சொல்லும் அளவுக்கு பெயரெடுத்துவிட்டது ஃபேஸ்புக். பொழுதுபோக்கு என்று சொல்லி பயன்படுத்த ஆரம்பித்த சிலர் இப்பொழுது நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்ளவும் பயன்படுத்தி வருகின்றனர்.
சில நொடிகளுக்கு முன்பு நடந்த விஷயங்களை கூட இந்த ஃபேஸ்புக் வசதியின் மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும். எதுவாக இருந்தாலும் ஃபேஸ்புக்கில் தட்டினால் போதும் என்றாகிவிட்டது. இதனால் பெரிய இடத்து விஷயங்கள் கூட மக்கள் காதுக்கு நொடிபொழுதில் எட்டிவிடுகிறது.
எதுவும் முன்பு போல் இல்லை. படித்து முடித்த உடன் தேவை ஒரு வேலை. அதன் பிறகு அவரவர் வேலை சுமை அதிகரித்துவிடுகிறது. ஆனால் இன்றைய தினத்தில் எவ்வளவு வேலையாக இருப்பினும் அதற்கேற்ற வகையில் ஒவ்வொருவரும் தன்னை அப்டேட் செய்து கொள்ள வேண்டி இருக்கிறது. இப்படி அப்டேட் செய்து கொள்ள ஃபேஸ்புக் போன்ற ஒரு நல்ல நண்பன் இன்றைய சூழலுக்கு தேவை தான்.
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் ஃபேஸ்புக் இன்னும் சில மதி நுட்ப வேலைப்பாடுகளை கொடுத்து இருக்கிறது. இந்த ஃபேஸ்புக்கில் இப்பொழுது டைம்லைன் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டைம்லைன் மூலம் ஃபேஸ்புக்கில் எந்த செய்தியையும் ஆண்டு வாரியாக பார்க்கலாம். உதாரணத்திற்கு 2011-ஆம் ஆண்டில் எந்தெந்த நண்பர்களுடன் என்னென்ன தகவல்களை பரிமாறினோம் என்று
சுலபமாக பார்க்கலாம்.
இந்த டைம்லைன் வசதி ஒரு “நினைவு பேழை” என்று கூட சொல்லலாம். ஆனால் இந்த வசதி பிடிக்காத சில ஃபேஸ்புக் நண்பர்களும் கூட இருக்கிறார்கள். உலகம் புதுசு புதுசா மாறி வரும் போது பழைய நெனப்பு எதுக்கு? என்று கேட்கும் சில நண்பர்களும் இருக்கின்றனர். இப்படி டைம்லைன் வசதியை விரும்பாதவர்களுக்கும் ஒரு புதிய வசதி இருக்கிறது.
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 6 மற்றும் 7 வெர்ஷன் இந்த டைம்லைன் வசதிக்கு சப்போர்ட் செய்வதில்லை. இதனால் டைம்லைன் பயன்பாட்டில் இருந்து வெளிவர வேண்டும் என்று நினைப்பவர்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 6 & 7 வெர்ஷனை டவுண்லோடு செய்து பயன்படுத்தினால் ஃபேஸ்புக் டைம்லைன் அப்ளிகேஷன் செயல்படாது.
800 மில்லியன் வாடிக்கையாளர்கள் ஃபேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர். அதில் 40 மில்லியன் முதல் 64 மில்லியன் நண்பர்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 6 & 7 வெர்ஷனை பயன்படுத்துபவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. டைம்லைன் வசதி வேண்டாம் என்று நினைப்பவர்களுக்கு ஓர் புதிய வழி இது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here