ஜுன் 17: மிகப்பெரும் சிந்தனையாளரும், தத்துவ ஞானியுமான, எழுத்தாளருமான ரோஜர் கராடி தனது 98ம் வயதில் மரணம் அடைந்தார். 1982-ம் வருடம் இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
ஊடகங்களின் நேசத்திற்குரியவர்:
பல ஆண்டுகளாக ஃபிரான்ஸ் நாட்டு ஊடகங்களின் நேசத்திற்குரியவராக கராடி திகழ்ந்தார். அவரது எழுத்துக்களும், சிந்தனைகளும், மற்றும் அரசியல் அவரது உறுதியான நிலைப்பாடும் ரோஜர் (ரஜா) கராடியை ஊடகங்களின் அன்பராக ஆக்கியிருந்தது. ஊடகங்கள் அவரை மிகவும் நேசித்தன. ஆனால், ரோஜர் எப்பொழுது ‘ரஜா’ வாக மாறினாரோ, எப்பொழுது இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டாரோ அத்தோடு அவரோடு கொண்ட ஊடகங்களின் நேசம் முடிவுக்கு வந்தது.
எழுத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் என்று இஸ்லாத்திற்கு எதிராக எழுதுவதற்கும் அல்லது முஸ்லிம்களீன் உயிரினும் மேலான முஹம்மது நபி அவர்களைப் பற்றி அசிங்கமாக இல்லாததையும் பொல்லாததையும் வரைவதற்கும் மேற்குலகம் அவசரம் காட்டும் வேளையில், ரோஜர் அவர்கள் தான் செய்த ஆராய்ச்சியின் பயனாக 1996-ஆம் வருடம் ‘தி ஃபவுண்டிங்க் மித்ஸ் ஆஃப் இஸ்ரேலி பொலிடிக்ஸ்’ என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
1998 ஆம் ஆண்டு 1,20,000 பிராங்க் (11,00,000 ரூபாய்)பணத்தினை அபராதமாக விதிக்கப்பட்டார். மேலும் அத்துடன் சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரின் பொழுது ஆறு மில்லியன் (அறுபது இலட்சம்) யூதர்கள் கேஸ் சேம்பரில் வைத்துக் கொல்லப்பட்டது என்பது உண்மை இல்லை என்று ஆராய்ச்சி செய்து கூறியதுதான் அவர் செய்த மிகப்பெரும் தவறு.
ஹிட்லருடன் கூட்டணி அமைத்த பிரான்சின் விகி அரசிற்கு எதிராக நடந்த பிரெஞ்சுப் புரட்சியில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டு அல்ஜீரியாவில் சிறையிலடைக்கப்பட்டார். பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு, பிரான்சு கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு அயராது உழைத்தார். பிரான்சு பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கராடி பின்னர் செனட் உறுப்பினரானார்.
ஐம்பதிற்கும் மேற்பட்ட அரசியல் மற்றும் மார்க்சிசம் குறித்த புத்தகங்களை எழுதியுள்ளார்.
1968ஆம் வருடம் கம்யூனிஷ ரஷ்யா செக்கோஸ்லோவாகியாவினை ஆக்ரமித்தனை எதிர்த்ததன் விளைவாக, 1970ஆம் வருடம் கம்யூனிசக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
அனைத்து மதத்தினரையும் ஒன்றினைக்க அரும்பாடுபட்டார். கிறிஸ்துவம், யூத மதம் மற்றும் இஸ்லாம் மதத்தினரை ஒன்றுபடுத்த அவர் எடுத்த முயற்சி பற்றிக் கூற வேண்டுமானால் அது அவரது 20வருட கனவாக இருந்தது.
முதலாளித்துவ ஆக்ரமிப்புகளுக்கு எதிராக கடும் குரல் எழுப்பி வந்தார். 1982-ஆம் ஆண்டு கராடி இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார். அன்றிலிருந்து கிறிஸ்துவத்தில் உள்ள விசயங்களை மக்களுக்கு தெளிவாக்கினார்.
ஏசுவைப் பற்றி செயிண்ட் பால்(Saint Paul) பைபிளில் கூறுவது உண்மையல்ல என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்தியம்பினார். தனது பெயரை ரோஜரிலிருந்து ‘ரஜா’ வாக மாற்றிக் கொண்டார். பாலஸ்தீனுக்கு முழு ஆதரவாளரானார்.
ரோஜர்(ரஜா) எழுதிய புத்தகங்களிலேயே மிகவும் பிரச்சனைக்குரியதாக மாறியது ’தி ஃபவுண்டிங்க் மித்ஸ் ஆஃப் இஸ்ரேலி பொலிடிக்ஸ்’ என்பதுதான். இந்நூலை எழுதியதற்காக ரஜா கராடிக்கு சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து முஸ்லிம் உலகம் தனது ஆதரவை அள்ளி வழங்கியது.
ரஜாவிற்கு அரசு மட்டும் அல்ல முஸ்லிம் அறிஞர்களும் பொது மக்களும் கூட தங்களது ஆதரவினை வழங்கினர். ஈரான் நாட்டு பார்லிமெண்ட் உறுப்பினர்கள் 160 பேரும் கையெழுத்திட்ட புகார் பிரான்ஸ் நாட்டிற்கு அனுப்பப்பட்டது.
1999ஆம் வருடம் 20 ஆம் நூற்றாண்டின் சிறந்த கலாச்சாரத்திற்கான நபராக ஜோர்டானிய அறிஞர்களால் அறிவிக்கப்பட்டார்.
மேற்குலகின் தற்காலத் தத்துவஞானி என்று சிரியாவின் முன்னாள் துணை அதிபரால் பாராட்டப்பட்டார்.
அரிஸ்டாட்டில் மற்றும் பிளேட்டோவிற்குப் பிறகு வந்தப் பெரிய தத்துவ ஞானியாவார் என்று லிபியாவின் முன்னாள் அதிபரான் கடாபியால் புகழப்பட்டார்.
மன்னர் ஃபைஸல் பெயரிலான உலகளாவிய இஸ்லாத்திற்கான பணிக்கான விருதினை 1986ஆம் ஆண்டு பகிர்ந்து கொண்டவர்.
சமீபத்திய பணிகள்:
கடந்த பல வருடங்களாக ‘செப்டம்பர் 11′, அமெரிக்காவே நிகழ்த்தியது என்று பொது மேடைகளில் முழங்கி வந்தார். யூதர்கள் திட்டமிட்டு ‘ஹோலோ காஸ்ட்’ நடத்தப்பட்டு இன அழிவுக்கு உட்படுத்தப்பட்டனர் என்பதை ஆதாரப்பூர்வமாக பேசி வந்தார். ஜெர்மனியை அழிக்க ‘ஹோலோ காஸ்ட்’ என்பது சர்ச்சில், எய்சன் ஹொவர், மற்றும் டி கௌல் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்ட புதுத் திட்டம் என்றும் தனது புத்தகத்தில் எழுதினார்.
இவரது மறைவு குறித்து உலகளாவிய ஊடகங்கள் அவ்வளவு முக்கியத்துவம் அளிக்கவில்லை. இருந்தாலும் ஒரு சில ஊடகங்கள் எழுதியுள்ளன. கல்ஃப் நியூஸ் இவர் பற்றி எழுதினாலும், கம்யூனிஸ்ட் என்றே தலைப்பிட்டு எழுதியுள்ளனர். துருக்கியில் குத்பாக்களில் ரஜா மறைவினைப் பற்றி உரையாற்றி உள்ளனர். ட்விட்டரில் ஓரளவு பேசப்பட்டாலும், இவரது மறைவினை கொண்டாடுவதாக ஒரு சில கிறிஸ்துவர்கள் அல்லது யூதர்கள் ட்வீட் செய்துள்ளனர். மலையாள நாளிதழ்களான தேஜஸ், மாத்யமம் ஆகியன ரஜா கராடியின் மறைவுக் குறித்து முக்கியத்துவம் அளித்து செய்தி வெளியிட்டுள்ளன.
தகவல்:இஸ்மாயீல்-ஷார்ஜா
No comments:
Post a Comment