.
ஜுன் 04: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 04.06.2012 மதியம் 1.30 மணியளவில் வெளியிடப்பட்டன. இதில் தஞ்சை பி.ஆர். பள்ளி மாணவர் ஸ்ரீநாத் 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெற்றுள்ளார். 496 மதிப்பெண்கள் எடுத்து 6 மாணவர்கள் 2வது இடத்தையும்இ 495 மதிப்பெண்கள் எடுத்து 11 மாணவர்கள் 3வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
நமதூர் முத்துப்பேட்டை பள்ளிக்கூட மாணவ, மாணவிகள் எந்தந்த மதிப்பெண்கள் பெற்றார்கள் என்ற விவரங்களை திரட்டி நமக்கு தருகிறார் நமது சிறப்பு செய்தியாளர்.
ரஹ்மத் பள்ளிக்கூடத்தின் நிலவரம் :
பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற
மாணவியின் பெயர் கே. பி. ரக்க்ஷனா – பெற்ற மதிப்பெண் : 483
இரண்டாம் மதிப்பெண் பெற்ற
மாணவியின் பெயர் R. உமா மகேஸ்வரி – பெற்ற மதிப்பெண் : 478
மூன்றாம் மதிப்பெண் பெற்ற
மாணவியின் பெயர் : M. ஷீரின் பேகம் – பெற்ற மதிப்பெண் : 474
இப்பள்ளியில் மூன்று மாணவிகள் அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்று உள்ளார்கள். 18 மாணவிகள் 450 க்கும் அதிகமான மதிப்பெண்களும், 24 மாணவிகள் 400 க்கும் அதிகமான மதிப்பெண்களும், 21 மாணவிகள் 350க்கும் அதிகமான மதிப்பெண்களும் பெற்று உள்ளனர். இப்பள்ளியில் தேர்வு எழுதிய அனைத்து மாணவிகளும் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
பிரிலியண்ட் பள்ளிக்கூடத்தின் நிலவரம் :
பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவியின் பெயர் : S. நந்தினி – பெற்ற மதிப்பெண் : 476
இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவன் பெயர் : A. அமீர் முஸ்தாக் – பெற்ற மதிப்பெண் : 457
மூன்றாம் மதிப்பெண் பெற்ற மாணவியின் பெயர் : M. கீர்த்திகா – பெற்ற மதிப்பெண் : 453
தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்ச்சி
சரஸ்வதி வித்யாலயா பள்ளிக்கூடத்தின் நிலவரம் :
பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவன் பெயர் : S. ஹரிஹரன் – பெற்ற மதிப்பெண் : 473 மற்றும்
G. நந்தினி என்ற மாணவியும் 473 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் இடத்தில் உள்ளார்.
இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவன் : M. கோபிநாதன் – பெற்ற மதிப்பெண் : 469
மூன்றாம் மதிப்பெண் பெற்ற மாணவன் : G. சற்குணன் – பெற்ற மதிப்பெண் : 468
தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்ச்சி
அருள்மிகு பெரியநாயகி மகளிர் மேல்நிலைப்பள்ளி
பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி : S. அக்ஷயா – பெற்ற மதிப்பெண் : 470
இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவி : S. விஜி – பெற்ற மதிப்பெண் : 459
மூன்றாம் இடம் : K. தன்யா – பெற்ற மதிப்பெண் : 437
இப்பள்ளியல் 71 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி :
பள்ளி முதல் மதிப்பெண் : வி. சாமுவேல் – பெற்ற மதிப்பெண் : 425
பள்ளி இரண்டாம் மதிப்பெண் : U. வீரசிவபிரியன் – பெற்ற மதிப்பெண் : 412
பள்ளி மூன்றாம் மதிப்பெண் : M. சையத் தவ்பீக் – பெற்ற மதிப்பெண் : 378
இப்பள்ளியின் தேர்ச்சி வீதம் 62 சதவீதமாகும்.
வின்னர்ஸ் ஸ்கூல் நிலவரம் :
பள்ளி முதல் மதிப்பெண் : A. அபுதாஹிர் – பெற்ற மதிப்பெண் : 339
பள்ளி இரண்டாம் மதிப்பெண் : முஹமது ராசிக்
பெற்ற மதிப்பெண் : 282
மூன்றாம் இடத்தில் எந்த மாணவனும் தேர்ச்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் அனைவரையும் முத்துப்பேட்டை பிபிசி www.muthupettaibbc.blogspot.com சார்பில் வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறோம்.
தகவல்: முத்துப்பேட்டை .org
No comments:
Post a Comment