ஜுன் 05: நைஜீரியாவின் வர்த்தக நகரமான லாகோசிலிருந்து தலைநகர் அபுஜா நோக்கி புறப்பட்டு சென்ற பயணிகள் விமானம் நேற்று முன்தினம் விபத்துக்குள்ளானது. இந்த விமானம், லாகோசிலிருந்து புறப்பட்டு சென்ற சிறிது நேரத்திலேயே, குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியதில் விமானத்தில் இருந்த 153 பேரும் பலியாகினர்.
இதே போன்று குடியிருப்பு பகுதியில் விழுந்ததால் அந்த பகுதியை சேர்ந்த பலர் உயிரிழந்தனர். இதுவரை அந்த பகுதியை சேர்ந்த 40 பேர் பலியாகி இருப்பது உறுதியாகி உள்ளது. இன்னும் பலர் பலியாகி இருக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. விபத்துக்குள்ளான விமானத்தை ஓட்டிய விமானி அமெரிக்காவை சேர்ந்தவர், இணை விமானி இந்தியாவை சேர்ந்த மகேந்திர சிங் ரத்தோர். இவர்களும் பலியாகி விட்டனர்.
இந்த விமான விபத்தால் நைஜீரியா சோகத்தில் மூழ்கி உள்ளது. நைஜீரியா அதிபர் குட்லக் ஜோனத்தான், 3 நாள் தேசிய துயரம் அறிவித்துள்ளார். விமான விபத்து குறித்து விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்பு பெட்டி மீட்கப்பட்டு விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
No comments:
Post a Comment