துபாயில் சுனாமி வந்தால் மிதக்கும் வகையில் கட்டப்படும் ரூ.660 கோடி மதிப்புள்ள ஓட்டல் ! - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Thursday, June 14

துபாயில் சுனாமி வந்தால் மிதக்கும் வகையில் கட்டப்படும் ரூ.660 கோடி மதிப்புள்ள ஓட்டல் !


ஜுன் 14: சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக துபாயில் கடலுக்கு கீழே 30 அடி ஆழத்தில் பிரமாண்ட ‘டிஸ்க்’ ஓட்டலை துபாய் அரசு ரூ.660 கோடியில் அமைக்க உள்ளது. சுனாமி போன்ற ஆபத்துகள் வந்தால், கடலுக்கு கீழ் இருக்கும் ஓட்டல் டிஸ்க் போல சுழன்று, கடல் மட்டத்துக்கு மேல் வந்துவிடும். துபாய் அரசுக்கு சொந்தமான முதலீட்டு நிறுவனம் ‘துபாய் வேர்ல்டு’. உலகிலேயே உயரமான ‘புர்ஜ் கலிபா’ கோபுரத்தை கட்டியது, பனை மரம் போன்ற ‘பாம் ஐலேண்ட்’ தீவை உருவாக்கியது, உலக மேப் போலவே கடலில் செயற்கை தீவுகளை உருவாக்கி வருவது ஆகியவை இது செயல்படுத்திய பிரமாண்ட திட்டங்கள். கடலுக்கு அடியில் பிரமாண்ட ஓட்டல் அமைக்கவும் 2 ஆண்டுகளுக்கு முன்பு
திட்டமிடப்பட்டது.
நிதி நெருக்கடி காரணமாக ஒத்திப்போடப்பட்ட இந்த சூப்பர் பிளானை துபாய் வேர்ல்டு நிறுவனம் மீண்டும் தூசி தட்டி எடுத்திருக்கிறது. ‘வாட்டர் டிஸ்கஸ்’ என்பது ஓட்டலின் பெயர். மேலும் கீழுமாக இரு டிஸ்க்குகள் இருப்பது போல ஓட்டல் வடிவமைக்கப்படுகிறது. மேல் டிஸ்க், கடல் மட்டத்துக்கு மேல் சில அடி உயரத்தில் இருக்கும். கீழ் டிஸ்க், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 35 அடி ஆழத்தில் இருக்கும். ஓட்டலின் இரு டிஸ்க் பகுதிகளையும் இணைக்கும் மத்திய பகுதியில் மாடிப்படி இருக்கும். இரு டிஸ்க்குகளும் சுழலும் வகையில் அமைக்கப்படும்.

கடலுக்கு அடியில் இருக்கும் டிஸ்க் போன்ற பகுதியில் 21 அறைகள் அமைக்கப்படுகின்றன. அறையில் சுகமாக ஓய்வெடுத்தபடியே, பவளப் பாறைகளின் அழகையும் மீன்கள் நீந்தி செல்வதையும் ரசிக்கலாம். கடலுக்கு அடியில் வெளிச்சம் குறைவாக இருக்கும் என்பதால் மீன்கள், கடல்வாழ் உயிரினங்கள், பவளப் பாறைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பிரத்யேக விளக்குகள் அமைக்கப்படுகின்றன. விருப்பப்பட்டால் நீந்திவிட்டும் வரலாம். ‘அண்டர்ஸீ பார்’ வசதியும் உண்டு. சுனாமி வந்தாலும் பாதிக்கப்படாத வகையில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் ஓட்டல் அமைக்கப்படும்.
சுனாமி வரும் சூழலில், கடலுக்கு அடியில் இருக்கும் டிஸ்க் ஓட்டல் சுழன்று கடலுக்கு மேல் பகுதியில் வந்துவிடும் அளவுக்கு தொழில்நுட்ப வசதி செய்யப்படும். கடலடி தரையில் டிரில்லிங் செய்து ராட்சத பில்லர்கள் அமைத்து மொத்த ஓட்டலும் நிறுவப்படும். போலந்து நாட்டின் ஜினியா நகரை சேர்ந்த ‘டீப் ஓஷன் டெக்னாலஜி’ என்ற நிறுவனம்தான் கட்டுமான டிசைனை உருவாக்கியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் பிக் இன்வெஸ்ட் கன்சல்ட் நிறுவனம் கடன் உதவி வழங்க, துபாய் வேர்ல்டின் துணை நிறுவனமான ட்ரைடாக்ஸ் வேர்ல்டு நிறுவனம் டிஸ்க் ஓட்டலை கட்டுகிறது. கடன் சுமை மற்றும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் வகையில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் ‘வாட்டர் டிஸ்கஸ்’ ஓட்டல் கட்டப்படுகிறது. ரூ.300 கோடி செலவாகும் என்று முதலில் கூறப்பட்டது. ரூ.660 கோடி வரை ஆகலாம் என தெரிகிறது என்று துபாய் வேர்ல்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here