சென்னை அண்ணா மேம்பாலத்தில் விபத்து பஸ் கவிழ்ந்து 38-பேர் காயம். - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Thursday, June 28

சென்னை அண்ணா மேம்பாலத்தில் விபத்து பஸ் கவிழ்ந்து 38-பேர் காயம்.


அண்ணா மேம்பாலத்தில் விபத்து: பஸ் டிரைவர் கைது- அதிவேகமாக ஓட்டியதாக வழக்கு

30 hurt as bus falls off Anna Flyover in Chennai

ஜுன் 28: சென்னை அண்ணா(ஜெமினி) மேம்பாலத்தில் மாநகர பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 38 பேர் காயமடைந்துள்ளனர்.

சென்னை பிராட்வேயிலிருந்து வடபழனி நோக்கி இன்று மதியம் 2 மணி அளவில் 17M எண் கொண்ட மாநகர பேருந்து சென்னை அண்ணாசாலையில் உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது.

அப்போது பாலத்திலிருந்து இறங்கி வளைந்து அருகில் இருக்கும் சர்வீஸ் ரோட்டில் செல்ல முயன்ற போது நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 38 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த விபத்து காரணமாக அண்ணா மேம்பால பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மேலும் விபத்து நட்ந்த 20 நிமிடங்கள் கழித்தே, அதனை பார்த்த போக்குவரத்துக் காவலர் ஒருவர் இது குறித்து உயரதிகாரிகளுக்கு தெரியப்ப்டுத்தியதாகவும், அதுவரை பேருந்தில் இருந்தவர்கள் காயங்களுடன் அலறிக்கொண்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பெருந்து கவிழ்ந்து விழுந்த கண்ணிமைக்கும் நேரத்திற்கு முன்னதாகத்தான் பாலத்தின் கீழ் இண்டிகா கார் ஒன்று சென்றதாகவும், ஓரிரு விநாடி தாமதமாகி இருந்தால் கூட, அதன் மீது பேருந்து விழுந்திருக்கும் என்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

விபத்திற்கு காரணம்

இதனிடையே இந்த விபத்துக்கு பேருந்து வேகமாக சென்றதே காரணம் என்று மாநகர போக்குவ்ரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பஸ்சின் டிரைவர் செல்போன் பேசியபடி ஓட்டியதாகவும், அப்போது திடீரென அவரது சீட் கழன்று விழுந்ததாலும் விபத்து நேரிட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.

விபத்தில் டிரைவரும் படுகாயமடைந்துள்ளார். அவரிடமும், பேருந்தில் பயணித்தவர்களிடமும் விசாரணை நடத்தும்போதுதான் உண்மை என்ன என்று தெரிய வரும்.

விபத்தில் சிக்கிய பஸ் வட பழனி டிப்போவைச் சேர்ந்ததாகும். இதன் எண் TN 01 4680. இது உண்மையில் ஒரு ஸ்பேர் பஸ்ஸாகும். ஏதாவது பஸ் பழுதுபட்டு விட்டால் இந்தப் பேருந்தை டிரிப்புக்கு அனுப்பி வைப்பார்கள்.

மோசமான பஸ்

ஆனால் இந்தப் பஸ்ஸே மகா மோசமான நிலையில் இருந்துள்ளதாம். எந்த டிரைவருமே இந்தப் பஸ்சை ஓட்டமுன்வர மாட்டார்களாம். அவ்வளவு பிரச்சினைகள் இதில் இருந்துள்ளன. மேலும் மகா கொடுமையிலும் கொடுமையாக டிரைவர் சீட்டே கேவலமாக இருந்துள்ளது. அதாவது கயிறு போட்டு டிரைவர் சீட்டை, பஸ்சின் தரைத் தளத்தில் உள்ள கம்பியோடு கட்டி வைத்துள்ளனர்.

இந்த சீட்டில் அமர்ந்துதான் டிரைவர் பிரசாத் பஸ்ஸை ஓட்டிச் சென்றுள்ளார். பஸ்சில் பல குழப்பங்கள், இருந்தாலும் டிரைவர் பக்கம்தான் முக்கியத் தவறு இருந்துள்ளதாக கூறப்படுகிறது. பஸ்ஸை இடதுபுறமாக திருப்பியபோது அவர் வலது கையில் செல்போனில் பேசியபடி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இடது கையால் ஸ்டிரியங்கைப் பிடித்துள்ளார். பஸ்ஸைத் திருப்பும்போது வேகமாக அது போயுள்ளது. அதேசமயத்தில் டிரைவர் சீட்டும் பிடுங்கிக் கொள்ள பஸ் தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளாகி விட்டது.

விபத்தில் சிக்கிய பஸ் 2007ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டதாகும். இதன் மதிப்பு ரூ. 10 லட்சம். இந்தப் பஸ்சின் ஆயுட்காலம் ஏற்கனவே முடிந்து விட்டது. இருந்தாலும் ஒட்டுப்போட்டு ஓட்டி வந்துள்ளனர்.

இதுகுறித்து மாநகர போக்குவரத்துக் கழக பணியாளர் சங்கத்தின் தலைவர் சந்திரன் கூறுகையில், இந்த பஸ்ஸை வட பழனி டிப்போவில் யாருமே விரும்ப மாட்டார்கள். ஒரு சாதாரண டிரிப் அடிக்கக் கூட அஞ்சுவார்கள். காரணம், இதில் அவ்வளவு கோளாறுகள் இருந்தன. டிரைவர் சீட்டும் முறையாக இல்லை என்றார்.

இந்த பஸ் மட்டுமல்லாமல் மேலும் பல பஸ்கள் இப்படித்தான்ஓட்டை உடைசலாக உள்ளன. பயணிகளின் உயிர்கள் குறித்தோ, டிரைவர்களின் பாதுகாப்பு குறித்தோ போக்குவரத்துக் கழகம் சற்றும் அக்கறை காட்டுவதில்லை. மாறாக, ஏதாவது ஒரு பஸ்ஸைக் கொடுத்து ஓட்டச் சொல்லி டிரைவர்களை வற்புறுத்துகின்றனர். வேறு வழியில்லாமல் அவர்களும் இதுபோன்ற பஸ்களை ரிஸ்க் எடுத்து ஓட்டிச் செல்கின்றனர் என்றார்.

ஆனால் இதை வடபழனி டிப்போ அதிகாரிகள் மறுத்துள்ளனர். அந்தப் பஸ் ஸ்பேர் பஸ் அல்ல என்று அவர்கள் கூறுகின்றனர். ஆனால் டிரைவர் சீட்டை கயிறு போட்டுக் கட்டியிருந்தனரா என்பது குறித்து அவர்கள் பதிலளிக்க மறுக்கிறார்கள்.

பஸ் ஓட்டையோ, உடைசலோ மொத்தத்தில் பயணிகள் உயிருடன் விளையாடி விட்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here