1967-94 காலக்கட்டத்தில் 2,40,000 ஃபலஸ்தீனர்களின் வசிக்கும் உரிமையை ரத்துச்செய்த இஸ்ரேல்! - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Wednesday, June 13

1967-94 காலக்கட்டத்தில் 2,40,000 ஃபலஸ்தீனர்களின் வசிக்கும் உரிமையை ரத்துச்செய்த இஸ்ரேல்!

1967-94 காலக்கட்டத்தில் 2,40,000 ஃபலஸ்தீனர்களின் வசிக்கும் உரிமையை ரத்துச்செய்த இஸ்ரேல்!
ஜுன் 13: 1967-94 காலக்கட்டத்தில் 2,40,000 மேற்பட்ட ஃபலஸ்தீன் மக்கள் சொந்த நாட்டில் வசிக்கும் உரிமையை ஆக்கிரமிப்பு இஸ்ரேல் ரத்துச் செய்துள்ளது. இச்செய்தியை இஸ்ரேல் பத்திரிகையான ஹாரட்ஸ் வெளியிட்டுள்ளது.

குடும்பத்தை காப்பாற்ற வெளிநாட்டிற்கு சென்ற ஃப்ரொஃபஸனல்கள், மாணவர்கள் உள்பட 2,40,000 ஃபலஸ்தீனர்கள் பின்னர் தங்களது சொந்த நாட்டிற்கு திரும்ப அனுமதிக்காமல் வசிக்கும் உரிமையை இஸ்ரேல் அரசு ரத்துச் செய்ததாக ஹாரட்ஸ் கூறுகிறது.

காஸ்ஸாவைச் சார்ந்த ஒரு லட்சம் பேருக்கும், மேற்கு கரையைச் சார்ந்த 1,40,000 பேருக்கும் இவ்வாறு வசிக்கும் உரிமை மறுக்கபட்டுள்ளது. பிராந்தியத்தில் வசிப்பிட விபரங்களைக் குறித்து ஒரு ஏஜன்சி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகத்தில் சமர்ப்பித்த மனுவிற்கு கிடைத்த பதிலில் இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

வசிக்கும் உரிமை மறுக்கப்பட்டோரில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 90 வயதிற்கும் மேலானவர்கள் ஆவர். அதிக காலம் வெளிநாட்டில் தங்கியிருந்தார்கள் என்று கூறி இவர்களின் வசிக்கும் உரிமையை இஸ்ரேல் ரத்துச்செய்தது.

வெளிநாட்டிற்கு செல்லும் காஸ்ஸா மற்றும் மேற்கு கரையைச் சார்ந்த மக்களின் அடையாள ஆவணங்களை இஸ்ரேல் அதிகாரிகள் பறிமுதல் செய்வது வழக்கம். இவ்வாறு வெளிநாடுகளுக்கு செல்லும் ஃபலஸ்தீனர்களுக்கு 3 வருட கால அவகாசத்தை இஸ்ரேல் அளிக்கிறது. இது பூர்த்தியானவுடன் பின்னர் ஒவ்வொரு வருடம் வீதம் மூன்று முறை புதுப்பிக்கலாம். ஆனால், இதனைச் செய்யாவிட்டால் நோட்டீஸ் கூட அளிக்காமல் வசிக்கும் உரிமையை இஸ்ரேல் அரசு ரத்துச் செய்வதாக செய்தி கூறுகிறது.

தற்பொழுது கிழக்கு ஜெருசலத்தில் வசிக்கும் ஃபலஸ்தீன் மக்கள் மீதும் இதேச் சட்டத்தை யூத அரசு திணிப்பதாக செய்தி கூறுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here