விரைவில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்த்தப்படுகிறது. - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Thursday, May 17

விரைவில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்த்தப்படுகிறது.

மே. 17: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் போன்றவற்றின் விலையை உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்கள் விலை பல மடங்கு உயர்ந்து விட்டதால் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த மத்திய அரசு தயங்கியபடி உள்ளது.

விலையை உயர்த்தாத காரணத்தால் இந்திய எண்ணை நிறுவனங்கள் கடும் வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றன. இனியும் இந்த இழப்பை தாங்க முடியாது என்பதால், தாங்களே பெட்ரோலிய பொருட்கள் விலையை உயர்த்தப் போவதாக எண்ணை நிறுவனங்கள் எச்சரித்தன.

இதைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. தற்போது பாராளுமன்ற கூட்டத் தொடர் நடந்து வருவதால், 22-ந்தேதி கூட்டத்தொடர் முடிந்த பிறகே இது தொடர்பான முடிவுகளை மத்திய அரசு வெளியிடும் என்று தெரியவந்துள்ளது.

எனவே அடுத்த வார இறுதியில் பெட்ரோல் விலை உயர வாய்ப்புள்ளது. பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.9 வரை உயர்த்த வேண்டும் என்று இந்திய எண்ணை நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அந்த அளவுக்கு விலையை உயர்த்த மத்திய அரசு விரும்பவில்லை.

ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதால் பெட்ரோல், டீசல் விலையை குறைந்த அளவே உயர்த்த அரசு நினைக்கிறது. ஆனால் குறைந்தபட்சம் ரூ.6 அல்லது ரூ.7 என்ற அளவுக்காவது உயர்த்த வேண்டும் என்று எண்ணை நிறுவனங்கள் கூறிவருகின்றன.

எனவே பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.4 அல்லது ரூ.5ஆக மத்திய அரசு உயர்த்தும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. டீசல் விற்பனையில் எண்ணை நிறுவனங்களுக்கு லிட்டருக்கு ரூ.3 வரை இழப்பு ஏற்படுகிறது. எனவே டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 உயரக்கூடும்.

சமையல் கியாஸ் விலையையும் உயர்த்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சமையல் கியாஸ் விலை சிலிண்டருக்கு ரூ.40 முதல் ரூ.50 வரை உயர்த்தப்படலாம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here