மே 17: கடந்த 3 மாத காலமாக முத்துப்பேட்டையில் உள்ள அவசர கால மருத்துவ உதவிக்கான ”108 ஆம்புலன்ஸ்” சரி வர செயல்படாமல் இருப்பதால் மாற்று ஆம்புலன்ஸ் சில தினங்களுக்கு முன்பாக முத்துப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வந்து இருந்தது.
16.5.12 காலை 10 மணியளவில் அதனை திரும்ப பெற்றுக்கொள்ள போவதாக முத்துப்பேட்டையில் உள்ள சிலருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலை தன்னார்வ சேவையில் ஆர்வமுள்ள பலருக்கு அலைபேசி வாயிலாக பகிர்ந்து கொள்ளப்பட்டது.
இதனை அறிந்த ஆசாத் நகர் 2 மாணவரணியினை சார்ந்த பைசல், முகம்மது சித்திக், நவாஸ்கான், தர்கா S.S பாக்கர் அலி, சுனா இனா (ஆட்டோ ஓட்டுனர்), மெட்ரோ மாலிக் – காங்கிரஸ் கட்சி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தினை சார்ந்தவர்கள், வர்த்தக சங்கம், வர்த்தக கழக பிரமுகர்கள், பல தன்னார்வ தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் அரசு ஆரம்ப நிலையம் முன்பாக கூட ஆரம்பித்து, அங்குள்ள அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு சற்று நேரம் பதற்றம் நிலவியது.
அதன் பின் அதிகாரிகளின் பேச்சு வார்த்தையாலும், அவர்கள் தந்த உறுதிமொழியாலும் பொது மக்கள் அனைவரும் கலைந்தனர். முன் அறிவிப்பு இன்றி முத்துப்பேட்டையிலிருந்து 108 ஆம்புலன்ஸை இடம் மாற்றம் செய்ய அதிகாரிகள் முயற்சி செய்தால் மிகப்பெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று பொது மக்கள் சார்பில் அதிகாரிகளுக்கு எச்சரிக்கையாக கூறப்பட்டது.
நன்றி: முத்துபேட்டை.org
No comments:
Post a Comment