பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் மே 22ம் தேதி வெளியிடப்படுகிறது. - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Thursday, May 3

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் மே 22ம் தேதி வெளியிடப்படுகிறது.


மே 03: பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள், வரும் 22ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என, பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி அறிவித்துள்ளார்.


"மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வின் முடிவுகளை, 22ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிட, முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, அந்த தேதியில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றார் சிவபதி.

ஏழு லட்சம் பேர்: தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மார்ச் 8ம் தேதி துவங்கிய பிளஸ் 2 தேர்வுகள், 30ம் தேதி வரை நடந்தன. 2,000 மையங்களில் நடந்த இத்தேர்வை, 7 லட்சத்து 63 ஆயிரத்து 124 மாணவர்கள் எழுதினர். இவர்களில், மாணவர்கள் 3 லட்சத்து 53 ஆயிரத்து 953 பேர்; மாணவியர், 4 லட்சத்து 9 ஆயிரத்து 171 பேர்.

விடைத்தாள்கள் திருத்தும் பணிகள், 47 மையங்களில் நடந்து வந்தன. அனைத்து மையங்களிலும் பணிகள் முடிந்த நிலையில், சிறுபான்மை மொழிப்பாட விடைத்தாள்கள் திருத்தும் பணிகள், நான்கு மையங்களில் நேற்றுடன்(மே 2ம் தேதி) முடிவடைந்தன. சென்னையில் உள்ள டேட்டா சென்டரில், மதிப்பெண்களை பதிவு செய்யும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

இந்தப் பணிகள் முடிந்ததும், தேர்வு முடிவுகள் தயாரிக்கப்படும். அனைத்துப் பணிகளும், 19ம் தேதிக்குள் முடிவடைந்து விடும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 20, 21 ஆகிய தேதிகளில், மதிப்பெண்கள் அடங்கிய பட்டியல், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு அனுப்பப்படும்.

வரும் 22ம் தேதி காலை 11 மணிக்கு, தேர்வுத் துறை இயக்குனர் அலுவலகத்தில் இயக்குனர் வசுந்தரா தேவி, தேர்வு முடிவுகளை வெளியிட்டதும், அதே நேரத்தில், பள்ளிகளில் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவு பட்டியல்களை, தலைமை ஆசிரியர்கள் வெளியிடுவர்.

12 நாள் தாமதம்: கடந்த ஆண்டு மே 9ம் தேதி, பிளஸ் 2 முடிவுகள் வெளியிடப்பட்டன. ஆனால், இந்த ஆண்டு 12 நாட்கள் தாமதமாக வெளியிடப்படுகிறது. பள்ளி துவங்கியதில் கால தாமதம் ஏற்பட்டதால், தேர்வு துவங்குவது ஒரு வாரம் தள்ளிப்போனது.

மேலும், விடைத்தாள் திருத்தும் பணிகளின்போது, அரசு விடுமுறை நாட்கள் அதிகம் வந்ததால், குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனால், இந்த ஆண்டு தேர்வு முடிவுகள் தள்ளிப்போயுள்ளன.

பொறியியலுக்கு பாதிப்பு?: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தள்ளிப்போயிருப்பதால், மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக, உயர்கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செயலர் பேட்டி: இதுகுறித்து, உயர்கல்வித்துறை செயலர் ஸ்ரீதரிடம் கேட்டபோது, "பிளஸ் 2 தேர்வு முடிவு தாமதமாக வெளியிடுவதால், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட எந்த தொழிற்கல்வி படிப்பு சேர்க்கைக்கும் பாதிப்பு வராது. அந்தளவிற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here