மார்ச். 4- திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள கீழபாண்டியை சேர்ந்தவர் ரவி. அவரது மகன் பாரதி. (வயது 14). அங்கு உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் நேற்று மாலை வீட்டு முன்பு கிடந்த குப்பையை எரிக்க முயன்றார். அப்போது மண் எண்ணையை ஊற்றி நெருப்பை பற்ற வைத்தார். அப்போது குபீர் என பிடித்த தீ பாரதியின் உடலில் பற்றியது. உடல் கருகிய பாரதி கதறி துடித்தார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர். உயிருக்கு போராடிய பாரதியை தூக்கி கொண்டு திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து எடையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:
Post a Comment