திருவாரூர் மாவட்டம் கல்வியில் முதலிடம் பெற ஆசிரியர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Sunday, March 4

திருவாரூர் மாவட்டம் கல்வியில் முதலிடம் பெற ஆசிரியர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

திருவாரூர் மாவட்டம் கல்வியில் முதலிடம் பெற ஆசிரியர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்:  கலெக்டர் பேச்சு

மார்ச்.4 :- கல்வியில் முதலிடம் பெற ஆசிரியர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் சி.நடராசன் தெரிவித்தார். திருவாரூர் ஆர்.சி.பாத்திமா நடுநிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடந்தது. முன்னதாக கண்காட்சியை மாவட்ட ஊராட்சித் தலைவர் அ.ஜெயலெட்சுமி தொடங்கி வைத்தார்.
நிறைவு விழாவிற்கு நகர்மன்றத்தலைவர் வி.ரவிச்சந்திரன், ஒன்றியக்குழுத் தலைவர் மலர்மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் சி.வைத்தியநாதன் வரவேற்று பேசினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.ஜீவகனி, முதன்மைக்கல்வி அலுவலர் மா.சுப்பிரமணியன், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.வைத்திலிங்கம், உதவி கலெக்டர் ஸ்ரீராமன், ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் ஆர்.மாரியப்பன், நகர்மன்ற உறுப்பினர் எம்.தண்டபாணி, உதவி தொடக்கக்கல்வி அலுவலர் புருஷோத்தமன், பள்ளி தலைமைஆசிரியர் ஜேசெபின்மேரி, தாசில்தார் கோவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பெற்ற பள்ளிகளுக்கு மாவட்ட கலெக்டர் சி.நடராசன் பரிசுகளை வழங்கி பேசியதாவது:
ஆசிரியர்கள் மாணவர்கள் நேசிக்க வேண்டும். நல்ல பண்புகளை கற்றுத்தர வேண்டும். தகவல்களை புரிந்து கொள்ளும் ஆற்றலை, பொது அறிவை மாணவர்களிடம் விளக்க வேண்டும். நல்ல ஆசிரியர்கள் மூலம் நல்ல மணவர்கள் உருவாக்க முடியும். மாணவர்கள் மீது ஆசிரியர்கள் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். நல்ல சமுதாயத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களுக்கு பங்கு உள்ளது.
தங்களின் கடமைகளை சரிவர ஆற்றிட வேண்டும். எல்லோராலும் எல்லாம் முடியும். உன்னால் முடியாது, நீ எல்லாம் என்கிற எதிர்மறை சிந்தனைகளை கலைய வேண்டும். குறிக்கோள், நம்பிக்கையோடு உழைத்தால் எதையும் சாதிக்கலாம். தடைகள்தான் வெற்றியின் முதல் பட்டிகட்டு. தடைகளை உடைத்து சாதனை செய்ய வேண்டும். திருவாரூர் மாவட்டம் கல்வியில் முதலிடம் பெற வேண்டும். அதற்கு ஆசிரியர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அறிவியல் கண்காட்சியில் மன்னார்குடி மரக்கடை அரசு ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றது.
2ம் இடத்தை முத்துப்பேட்டை கோவிலூர் அரசு நடுநிலைப் பள்ளியும்,
3ம் இடத்தை திருவாரூர் ஆர்.சி.பாத்திமா பள்ளியும் பிடித்தது. முடிவில் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ரா.பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here