சிரியாவில் புரட்சிப்படை மீது அரசுப் படைகள் இன்று மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளன. சிரியா அரசு தொடர்ந்து இப்படி செய்தால் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என ஐ.நா. மனித உரிமைகள் குழு எச்சரித்துள்ளது. தலைநகரான ஹோம்ஸ் நகரில் ராணுவம் இன்று நடத்திய தாக்குதலினால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் மனித உரிமைகள் கழகம் கூறியுள்ளது.
இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கழகத்தின் தலைவர் நவி பிளே வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கடந்த ஆண்டில் மட்டும் 5400 பேர் சிரிய அரசால் கொல்லப்பட்டுள்ளனர். குழந்தைகள் உள்பட 28000 பொதுமக்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். 70000-க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துவிட்டனர்.
மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். இது தொடர்ந்தால் சிரிய அரசு மீது ஐ.நா.வின் பாதுகாப்புப் படை கடும் நடவடிக்கை எடுக்கும்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

