இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் தர சவுதி அரசர் ஒப்புதல்: ஏ.கே.அந்தோணி - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Tuesday, February 14

இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் தர சவுதி அரசர் ஒப்புதல்: ஏ.கே.அந்தோணி


இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் தர சவுதி அரசர் ஒப்புதல்: ஏ.கே.அந்தோணி
மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி இரண்டு நாள் பயணமாக சவுதி சென்றுள்ளார். நேற்று அங்கு சவுதி அரசர் அப்துல்லாவை சந்தித்தார்.
 
30 நிமிடங்கள் தொடர்ந்த இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு, பொருளாதாரம், மற்றும் அரசியல் துறைகளில் ஒத்துழைப்பு குறித்து விவாதித்ததாக இந்திய பாதுகாப்பு துறை செய்திதொடர்பாளர் சிட்டான்சு கூறினார்.
 
இந்த சந்திப்பின் போது, இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் உள்பட எல்லா உதவிகளும் அளிப்பதாக சவுதி அரசர் கூறியுள்ளார். மேலும், அமைதி பேச்சுவார்த்தை மூலம் வளைகுடா பகுதிகளில் நிலவிவரும் நெருக்கடிக்கு ஒரு முடிவு காணப்படும் என நம்புவதாக அந்தோணி தெரிவித்துள்ளார்.
 
இன்று சல்மான் மற்றும் காலித் ஆகிய இளவரசர்களை அந்தோணி சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு பரிமாற்றங்களை மேலும் உறுதிபடுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Post Bottom Ad

Responsive Ads Here