பிப்.19: பிரிஸ்பேனில் நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியான இடையேயான ஒருதினப் போட்டியில் ஆஸ்திரேலியா 110 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது.
முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட் செய்ய முடிவுசெய்து களமிறங்கியது. 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 288 ரன்களை ஆஸ்திரேலியா எடுத்தது. 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணி 43.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
