

போலியோ நோயினை தடுக்க ஆண்டுந்தோறும் போலியோ சொட்டு மருந்து முகாமினை நாடு முழுவதும் இலவசமாக அரசு அமைப்பு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் செய்து வருகிறது. பேரூந்து நிலையங்கள், ரயில்வே நிலையங்கள், பூங்காக்கள், மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்,கடைத்தெருக்கள் என்று மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் நாடு முழுவதும் பல ஆயிரக்கணக்கான மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
நமதுர் முத்துப்பேட்டையில் ஆநென்னா பள்ளிக்கூடம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற பகுதிகளில் காலை 9 மணியளவில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டன. முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதிகளில் 8 மையங்கள், ஊராட்சி பகுதிகளில் 23 மையங்களில் 4112 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டது.
முத்துப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் மருத்துவர். சாந்தபிரபு மற்றும் மருத்துவர். ஜெயமாலா மேற்பார்வையில் நடந்தது.
போலியோ சொட்டு மருந்து முகாமில் தெற்கு ரயில்வேயும் இணைந்து செயல்பட்டு 240 சொட்டு மருந்து மையங்களை குறிப்பிட்ட இரயில்வே நிலையங்களில் அமைத்து இருந்தன. மருத்துவ பணியாளர்கள், தனியாhர் தொண்டு நிறுவன ஊழியர்கள், தன்னார்வ இயக்கத்தினை சார்ந்தவர்கள், பள்ளி கல்லுரி மாணவ மாணவிகள் சேவை மனப்பான்மை கொண்டவர்கள் இன்று அனைத்து பகுதிகளிலும் நடந்த முகாமிற்கு முழு ஒத்துழைப்பினை தந்து இருக்கிறார்கள்.
நன்றி
முத்துப்பேட்டை.ORG
