சிங்கப்பூர் முத்துப்பேட்டை அசோசியேசனின் புதிய நிர்வாகிள் தேர்ந்தேடுப்பு. - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Tuesday, September 1

சிங்கப்பூர் முத்துப்பேட்டை அசோசியேசனின் புதிய நிர்வாகிள் தேர்ந்தேடுப்பு.







செப்டம்பர் 01: சிங்கப்பூர் முத்துப்பேட்டை அசோசியேசனின் புதிய நிர்வாகிள் தேர்ந்தேடுப்பு. சிங்கப்பூரின் (MA(S), AGM கூட்டம் லிட்டில் இந்தியா ஆர்கேட் பனானாலீப் உணவக மாடியில்,  29.08.2015. சனிக்கிழமை பின்னரேம் சுமார் 7.45 மணியளவில் MA(S)-ன் அழைப்பின் பேரில் வருகை தந்தவர்களின் முன்னிலையில் நடந்தது. முதலில் ஆண்டறிக்கை விவரிக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து, MA(S) தலைவராக இருந்து வந்த M.A.ஜாஹிர் ஹுசேன் அவரது செயற்பாட்டை பாராட்டி மீண்டும் அவரையே தலைவராகவும், துணைத்தலைவராக இருந்து வந்த A.தமீம் நசீர் அவர்களையும், செயலாளராக V.A.H.D.அப்துல் சலீம் அவர்களையும், M.ஹாஜா அலாவுதீன் அவர்களை பொருளாளராகவும் ஏக மனதாக நியமித்து, கமிட்டி உறுப்பினர்கள் 
K.முஹம்மது நூருல் அமீன், D.சபீர் அஹமது, A.அப்துல் மாலிக், H.அப்துல் லத்தீப் ஆகியோர்களையும் மற்றும் இக்கூட்டத்திற்கு வந்திருந்த MA(S) உறுப்பினர்கள், செயற்குழுவினர்கள், தன்னார்வலர்கள் ஆதரவோடு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அல்ஹம்துலில்லாஹ். 

MA(S) -ன் இவ்வருட செயல்பாட்டாக, குடும்ப தின ஒன்று கூடல் நிகழ்வு செந்தோசா கடற்கரையில் நடத்தியது, நோன்பு திறக்கும் நிகழ்வு பென்கூலன் பள்ளியில் நடத்தியது, பித்ரா அரிசி வினியோகம் செய்ததை FIM தலைவர் அவர்கள் (பரீவுல்லாஹ்)மிகச் சிறந்த முறையில் விவரித்தது, இரத்த தான நிகழ்வில் MA(S) உறுப்பினர்களின் செயற்பாடுகளைப் பார்த்து அவர்களை பாராட்டி, ஊக்குவித்து வருகிறது MA(S). மேலும், இது போன்ற நற்காரியங்களை விருப்பு, வெறுப்பின்றி தன்னார்வ தொண்டாக நாடு கடந்து குறிப்பாக இந்தோனேசியா, இந்தியா (முத்துப்பேட்டை) மக்களுக்கு செய்து வந்த பொருளாதார உதவி, மார்க்க கல்வியில் போட்டி நடத்தி கலந்து கொண்டவர்களுக்கு பரிசு வழங்குதல் உட்பட பல நிகழ்வுகளுக்கு ஈடுபட்ட MA(S) நல்லுள்ள தொண்டர்களை மனதார பாராட்டியும், இதுபோன்ற நிகழ்வுக்கு பொருளாதார உதவி செய்த அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டது. 

MA(S) க்கு வங்கி கணக்கு துவக்குவதற்கு தேவைப்படும் தொகையை, மேலும் கால தாமதம் செய்யாமல் அதற்கான பணியை உடனே செயல் படுத்த வேண்டிய அவசியத்தை விவரித்து ஆதரவு பெறப்படுகிறது. நமது கடந்தகால நிகழ்வுகளை நினைவு கூறும் விதமாக கையடக்க சிறுமலராக தொகுப்பு செய்து வழங்கினால் சிறப்பாக இருக்கும் என்று Dr.தமீம் தீன் சொன்ன கருத்து அமர்ந்து இருந்த அனைவருக்கும் ஒரு சிறப்பு செய்தியாக இருந்தது, இதனையும் ஆலோசனை செய்து அதற்கான தகவல்களை சேகரித்து வடிவமைப்பு செய்யலாம் என்றார்கள்.

கமிட்டி உறுப்பினர் A.அப்துல் மாலிக் அவர்கள் நமது MA(S)குடும்பமும், இதர நம் சமுதாயக்குழு அசோசியேசனும், முழுமையாக மார்க்க கல்வி பரிமாற்றங்களை நெறியோடு பயன்படும் விதமாக செயல்பட முழுக்க,முழுக்க, முழுநேர இமாமாக ஒருவரை அசோசியேசனுக்கு MA(S) மூலமாக வரவழைத்து, அதற்கான செயலில் ஈடு பட்டால் நல்லதாக இருக்கும், நமது MA(S)ம் இந்த மாதிரியாக செயல்படுகிறது என்று மக்கள் மத்தியில் தெரியவரும், என்ற ஒரு நல்ல கோரிக்கையை முன் வைத்தார். இதனையும் கவனத்தில் கொண்டு அடுத்தடுத்த கூட்டத்தில் இதைப் பற்றி முடிவு செய்யலாம் என்றும், எதிர் வரும் ஈதுல் அத்ஹா (ஹஜ்ஜுப் பெருநாள்) குடும்ப ஒன்று கூடல் நிகழ்வு பற்றிய ஆலோசனைக் கூட்டம் பற்றிய தகவல் விரைவில் முறையாக தெரிவிக்கப்படும் என்ற நற்செய்தியை அறிவித்து.

இறுதியாக இரவு நேர இனிய உணவுடன்,  இந்த நிகழ்வு அழகுடன் நிறைவு பெற்றது. சிறப்பாக நடக்க வழிசெய்த வல்ல இறைவனுக்கே எல்லாப்புகழ் அனைத்தும். அல்ஹம்துலில்லாஹ்.

செய்தி தொகுப்பு:
ரஷீத் அலி - சிங்கப்பூர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here