முத்துப்பேட்டை நகரில் கொள்ளிடம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர். - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Wednesday, May 27

முத்துப்பேட்டை நகரில் கொள்ளிடம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர்.


மே 27: முத்துப்பேட்டை நகரில் கொள்ளிடம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர். முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டு மக்களுக்கும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விணியோகிக்கப்பட்டு வருகிறது. முத்துப்பேட்டை அடுத்த எடையூர் கிராமத்திலிருந்து பம்பிங் செய்யப்பட்டு முத்துப்பேட்டைக்கு குடிநீர் கொண்டு வரப்படுகிறது.
பின்னர் அதனை புதிய பேருந்து நிலையத்தில் உள்ள மிக பிரம்மாண்டமான சம்பில் சேகரிக்கப்பட்டு மோட்டார் மூலம் அருகில் உள்ள 5 லட்சம் கொள்ளளவு கொண்ட குடிநீர் டேங்கில் ஏற்றப்படுகிறது. அதே போன்று பெரிய கடைத்தெரு பகுதியில் உள்ள 3 வட்சம் கொள்ளளவு கொண்ட குடிநீர் டேங்கிலும் ஏற்றப்பட்டு நகரில் இரு பகுதியாக பிரித்து மக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. 
இந்த நிலையில் தற்பொழுது கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள இந்த நிலையில் பம்பிங் செய்யப்படும் நேரத்தைப் பொருத்து நகர மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுவதால் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இப்படி பட்ட சூழ்நிலையில் முத்துப்பேட்டைக்கு வரும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட மெயின் பைப்பில் பல இடங்களில் முறையான பராமரிப்பு கிடையாததால் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு தினமும் பல லட்சம் லிட்டர் குடிநீர் விரயம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் முத்துப்பேட்டை கடைத்தெருவில் உள்ள சுங்க அலுவலகம் அருகில் மெயின் ரோட்டில் உள்ள மெயின் குழாய் வால்வுகள் உடைந்து பழுதடைந்த நிலையில் உள்ளதால் பம்பிங் செய்யும் பொழுது குடிநீர் இதன் வழியாக வெளியேறி தொட்டி நிரம்பி வழிந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல வியாபார நிறுவனங்கள் இடங்களில் குளம் போல் தேங்கி சேரும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வியாபாரிகள் அவதிப்படுகிறார்கள். இதன் மூலம் நகர் பகுதிக்கு வரவேண்டிய தினமும் பல்லாயிரம் கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படுகிறது. இந்த நிலையில் அந்த வால்வு தொட்டிலிருந்து வெளியேரும் குடிநீர் நாள் கணக்கில் தேங்கி கிடப்பதால் அசுத்தமான நிலையில் உள்ளது. மேலும் சாக்கடை போன்று துற்நாற்றம் வீசுகிறது. பம்பிங் செய்யப்படாத நேரத்தில் மீண்டும் சுகாதாரமற்ற அந்த தண்ணீர் குழாயிக்குள் சென்று விடுவதால் குடிநீரில் கலந்து மக்களுக்கு செல்கிறது. இதன் மூலம் பலவிதமான தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதனை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடமும், குடிநீர் வடிக்கால் வாரியம் கவனத்திற்கும் எடுத்து சென்றும் யாரும் கண்டுக்கொள்ளவில்லை. இது குறித்து அப்பகுதி வர்த்தக்கழக துணைத் தலைவர் தமிழ்செல்வன் கூறுகையில் நீண்ட நாட்களாக இந்த குடிநீர் வால்வில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி செல்கிறது. இதனை பேரூராட்சியிடம் கூறியும் பலனில்லை. மக்களுக்கு அடிப்படை வசதியான சுகாதாரமான குடிநீரை வழங்குவது பேரூராட்சியின் கடமை. ஆனால் இங்கே குடிநீருக்கு பதில் மக்களுக்கு சாக்கடைநீரை பேரூராட்சி நிர்வாகம் வினியோகித்து வருகிறது. இதனை உடனே சரி செய்ய வேண்டும் என்றார்.
தகவல்: நிருபர் மு.முகைதீன் பிச்சை

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here