முத்துப்பேட்டையில் கார்-லாரி மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம். - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Monday, May 4

முத்துப்பேட்டையில் கார்-லாரி மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம்.


மே 04: முத்துப்பேட்டையில் கார்-லாரி மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம்.
முத்துப்பேட்டையில் கார்-லாரி மோதியதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். திருவாரூர் திருநெல்லிக்காடு அருகில் உள்ள துரைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர் மகன் அய்யப்பன்(28). கார் டிரைவரான இவர் தனது காரில் அதே ஊரைச் சேர்ந்த பவுன்ராஜ்(44). அவரது மனைவி அலமேலு மங்கை(35) ஆகியோரை அழைத்துக் கொண்டு முத்துப்பேட்டை வந்தார். பின்னர் கோவிலூர் பைப்பாஸ் சாலை அருகே பட்டுக்கோட்டை நோக்கி சென்றபோது கார் பழுதாகி நின்றது. 
உடன் டிரைவர் அய்யப்பன் காரை இழுத்து செல்ல அவரது நண்பர் மாரிமுத்துவின் காருக்கு தகவல் தெரிவித்து காரை வரவழைத்தார். பின்னர் கயிறுக்கட்டி காரை இழுத்த போது கயிறு அறுந்தது. பின்னர் மீண்டும் கயிறுக்கட்டி அனைவரையும் ஏற்றிக் கொண்டு காரை வேகமாக ஓட்டியபோது விழுப்புரத்திலிருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்ற லாரி மீது எதிர்பாராத விதமாக போதியது. 
இதில் காரில் இருந்த டிரைவர் அய்யப்பன், மாரிமுத்து மற்றும் அலமேலு மங்கை ஆகியோருக்கு படுகாயம் ஏற்பட்டது. உடன் அவர்கள் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தகவல்: நிருபர் மு.முகைதீன் பிச்சை

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here