ஏப்ரல் 27: முத்துப்பேட்டை அருகே உள்ள அம்மலூரை சேர்ந்த சண்முகவேல் மகன் மகாதேவன் (வயது 25). இவர் அதே பகுதியை சேர்ந்த வருண், மதியழகன், கபிலன், அன்பரசு ஆகியோரை வெட்டியதாக எடையூர் போலீசில் வழக்கு உள்ளது.
மேலும் அவர் அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்ததாக முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளது.
இதைத்தொடர்ந்து மகாதேவனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
அதனை பரிசீலனை செய்த கலெக்டர் மதிவாணன், மகாதேவனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
அதன்பேரில் முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், மகாதேவனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். பின்னர் அவர் திருச்சி மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
கடந்த 2014–ம் ஆண்டு மகாதேவன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு 3 மாதம் தண்டனை அனுபவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்: முத்துப்பேட்டை நியூஸ்


No comments:
Post a Comment