பிப்ரவரி 17: ஐரோப்பியாவில் டாக்டர் பட்டம் பெற்ற முத்துப்பேட்டை தொழிலதிபருக்கு இன்று வரவேற்பு.
முத்துப்பேட்டையைச் சேர்ந்தவர் தொழிலதிபர் எஸ்.எம்.ஹைதர் அலி. இவருக்கு குவைத் நாட்டில் தலைமையாக கொண்டு பல்வேறு நாடுகளில் டி.வி.எஸ். கார்கோ நிறுவனம் உள்ளது. இந்த சேவையைப் பாராட்டி சமீபத்தில் ஐரோப்பியா பல்கலைகழகம் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இதனை அடுத்து பல்வேறு நாடுகளில் இவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று தொழிலதிபர் ஹைதர் அலி குவைத்திலிருந்து சொந்த ஊரான முத்துப்பேட்டைக்கு வருகிறார். அவருக்கு வழக்கறிஞர் தீன்முகமது, கருத்தப்பா சித்திக் தலைமையில் பல்வேறு அமைப்பினர் சிறப்பான வரவேற்பு வழங்குகிறார்கள்.
தகவல்: நிருபர் மு.முகைதீன் பிச்சை


No comments:
Post a Comment