ஜுன் 24: முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, எதிரிகளின் நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் இந்தியாவின் முதல் போர்க்கப்பல் ஐ.என்.எஸ். கமோர்தா அடுத்த மாதம் இந்திய கடற்படையில் இணைக்கப்படுகிறது.
இந்த கப்பலை கொல்கத்தாவை சேர்ந்த கார்டன் ரீச் என்ஜினியரிங் நிறுவனம் உருவாக்கிக் கொடுத்துள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர்கள் (ஏவுகணைகளை) கொண்ட இந்த கப்பல்தான் இந்தியாவின் முதல் ஆண்டி-சப்மரைன் போர்க்கப்பலாகும்.
3400 டன்கள் எடை கொண்ட இந்த கப்பல் அதிகபட்சமாக 25 நாட்டுகள் (கடல் வேக அளவு) வேகத்தில் செல்லக்ககூடியது. இதில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 3888 கிலோ வாட் திறன் கொண்ட நான்கு டீசல் என்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த என்ஜின்கள் 1050 ஆர்.பி.எம். வேகத்தில் சுழலக்கூடியது. இதன் மூலம் 3500 நாட்டிகல் மைல் தொலைவை 18 நாட்டுகளில் கடக்க முடியும்.
இவ்வளவு சிறப்பம்சம் கொண்ட இந்த கப்பல் 109 மீட்டர் நீளமும், 13 மீட்டர் அகலமும் கொண்டுள்ளது. மேலும், இதில் ஹெலிகாப்டர்களை நிறுத்தும் அளவுக்கு வசதியும் உள்ளது. இந்த போர்க்கப்பல் அடுத்த மாதம் விசாகப்பட்டணத்தில் உள்ள இந்திய கடற்படையின் ஈஸ்டர்ன் ஃபிளீட்டிலிருந்து இணைக்கப்படுகிறது.


No comments:
Post a Comment