+2 தேர்வு முடிவுகள். பெற்றோருக்கு ஓரு வேண்டுகோள்! - BBC

BBC

Thursday, May 8

+2 தேர்வு முடிவுகள். பெற்றோருக்கு ஓரு வேண்டுகோள்!


மே 08: ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை 09-05-2014 (வெள்ளிக்கிழமை) வெளியாகின்றன. உங்கள் வீட்டுப் பிள்ளைகள், உங்களுக்குத் தெரிந்த பிள்ளைகள் பலரும் தேர்வு முடிவுகளைப் பெறலாம். நிச்சயமாக, தேர்வுகள் வாழ்க்கையின் ஒரு முக்கியமான தருணம். ஆனால், அதுவே வாழ்க்கை அல்ல என்கிற புரிதல் பெற்றோர், பிள்ளைகள் இருவருக்கும் தேவை. 

இந்தத் தேர்வில் வென்று விட்டால், அதுவே இறுதி வெற்றியும் அல்ல; இதில் தோல்வியோ அல்லது தொய்வோ அடைந்துவிட்டால் அதுவும் இறுதி கிடையாது.

இன்னமும் போகவேண்டிய தூரம் எவ்வளவோ இருக்கிறது. அந்தப் புள்ளியிலேயே தேங்கி நிற்பது எதற்கும் உதவாது. தேர்வுகள் மட்டுமே ஒரு திறமைசாலி மாணவனை அடையாளப்படுத்த முடியாது. திறமை என்பதை இதுதான் என நீங்கள் குறிப்பாக வரையறுக்க முடியாது. 

கல்வி... பொருளீட்டுவதற்கு என்கிற கருத்தாக்கத்தை பிள்ளைகளின் மனதில் நாம் ஆழமாக விதைத்து பலகாலம் ஆகிவிட்டது. ஆனந்தமாக, விருப்பபட்டு அவர்கள் விரும்புகிற துறையை தேர்வு செய்கிற வாய்ப்பை பெரும்பாலான பெற்றோர் தருவதில்லை. எதிர்காலம் என்னாகுமோ என்கிற பயம் தான் காரணம்; ஆனாலும், கொஞ்சம் அவர்களின் குரலையும் காதுகொடுத்து கேளுங்கள்.

எதிர்வீட்டு அல்லது எதோ ஒரு உறவுக்கார பிள்ளையோடு ஒப்பிட்டு பேசாதீர்கள்; அது காயப்படுத்துமே தவிர, வேறெந்த மாற்றத்தையும் கொண்டு வரப்போவதில்லை. முகத்தை உம்மென்று வைத்து நரகவேதனையை பிள்ளைகளுக்கு தராதீர்கள். "நடந்துடுச்சு; நீ நல்லாதான் பண்ணினே; விடு, பார்த்துக்கலாம் கண்ணா!" என தலைதடவி சொல்லுங்கள். இன்னமும் தன்னம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர்கொள்ள பக்க துணையாக இருங்கள்.

அதே சமயம் தேர்வுகளை ஒன்றுமே இல்லாத அம்சம்... 'நான் தேர்வில் தோற்றும் இப்படி ஆகிவிட்டேன்' என்கிற மாதிரி நிலைத்தகவல்களை தவிருங்கள் அன்பர்களே. தேர்வும் வாழ்க்கையின் அங்கம் தான்; அதில், ஜெயிப்பதும் தேவை. எந்தத் தேர்வு என்பதில்தான் வித்தியாசம். 

வாழ்க்கையின் சிக்கலான புள்ளிகளில் ஜெயித்தவர்கள், எப்படி ஜெயித்தீர்கள் என்று சொல்லுங்கள். இதற்கும் அதற்கும் முடிச்சிடாதீர்கள்:)

டென்ஷன் ஆகி, பிள்ளையையும் மன உளைச்சலுக்கு உள்ளாக்காதீர்கள். தேர்வு ஒன்றும் உங்கள் தங்கத்தை உரசிப்பார்க்கும் உரைகல் இல்லை. கனிவோடு காத்திருங்கள்; 
 தகவல்: அதிரை எக்ஸ்பிரஸ்


எல்லாருக்கும் முத்துப்பேட்டை.ORG  (www.muthupet.org , www.muthupet.com) மற்றும் முத்துப்பேட்டை பிபிசியின் (www.muthupettaibbc.blogspot.com) வாழ்த்துகள்.


தேர்வு முடிவுகளை உங்கள் முத்துப்பேட்டை.ORG  (www.muthupet.org , www.muthupet.com) மற்றும் முத்துப்பேட்டை பிபிசி (www.muthupettaibbc.blogspot.com)  இணையதளங்களில் காணலாம்...

whatsup messenger, facebook, email மூலமாக எங்களை தொடர்பு கொண்டு +2 தேர்வு முடிவுகளை அறியலாம்.
இதற்காக பிரத்யோக வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் விரைவில்...

முத்துப்பேட்டை இணையதள ஆசிரியர் குழு


No comments:

Post a Comment