ஏப்ரல் 29: பஹ்ரைன் நாட்டின் முதல் பெண் விமானியான யாஸ்மீன் ஃபிரைடூன் முதன் முதலாக அந்நாட்டின் பயணிகள் விமானத்தை இயக்கியுள்ளார்.
பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்தவர் யாஸ்மீன் ஃபிரைடூன். இவர் கத்தாரில் உள்ள விமானக் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்து விட்டு கடந்த 2008-ஆம் ஆண்டு ‘கல்ஃப் ஏர்’ விமான நிறுவனத்தில் இரண்டாம் நிலை அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.
விமானி ஆவதற்கான அனைத்துப் பயிற்சிகளையும் கற்றுத் தேர்ந்த யாஸ்மீன் கடந்த மார்ச் மாதம் பஹ்ரைனின் முதல் பெண் விமானியானார்.
இந்நிலையில் முதன் முதலாக பயணிகள் விமானத்தை யாஸ்மீன் ஃபிரைடூன் இயக்கி சாதனை படைத்துள்ளார்.
இதுகுறித்து கல்ஃப் ஏர் விமானத்தின் தலைமை செயல் திட்ட அதிகாரி நசீர் அல் சால்மி கூறுகையில், “இது யாஸ்மீனின் கடின உழைப்பு மற்றும் அசாதாரண திறமையைக் காட்டுகிறது. பஹ்ரைன் நாட்டின் முதல் பெண் விமானியை உருவாக்கியதற்காக எங்கள் நிறுவனம் மிகவும் பெருமையடைகிறது. விமானப் போக்குவரத்து துறையில் பஹ்ரைன் பெண்கள் சேருவதற்கு யாஸ்மீன் ஃபிரைடூன் முன்னுதாரணமாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.” என்றார்.

No comments:
Post a Comment