ஏப்ரல் 27: இந்த ஆண்டின் முதல் இரு மாதங்களிலும், ‘உலகின் மிக பிசியான விமான நிலையம்’ என்ற பெயரை, லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திடம் இருந்து தட்டிக்கொண்டது, துபாய் சர்வதேச விமான நிலையம்.
இந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் சர்வதேச விமானநிலையங்கள் ஊடாக பயணித்த பயணிகளின் எண்ணிக்கைகள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தைவிட துபாய் ஊடாக 2 மில்லியன் அதிக பயணிகள் பயணித்துள்ளனர் என தெரியவந்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் இரு மாதங்களிலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, துபாயில் பயணிகளின் எண்ணிக்கை 13.5 சதவீதம் அதிகரித்தது. லண்டனில் இந்த அதிகரிப்பு 2.5 சதவீதம்தான். துபாய் ஊடாக 12,075,552 பயணிகள் பயணித்துள்ளனர். லண்டன் ஹீத்ரோ ஊடாக 10,282,300 பயணிகள் பயணித்துள்ளனர்.



No comments:
Post a Comment