ஏப்ரல் 27: எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் 40 வழித்தடங்களில் விமான சேவைகளை தற்காலிகமாக குறைக்க முடிவு!
துபாயில் இருந்து இயங்கும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், 40 வழித்தடங்களில் விமான சேவைகளை குறைக்கவோ, நிறுத்தவோ உத்தேசித்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையால் எமிரேட்ஸ் நிறுவனத்துக்கு Dh1 பில்லியன் நஷ்டம் ஏற்படும் என கணிப்பிடப்பட்டுள்ளது.
மே 1-ம் தேதியில் இருந்து ஜூலை 20-ம் தேதி காலப்பகுதியிலேயே இந்த விமான சேவை குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. அந்த 80 நாட்கள் காலப்பகுதியில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் 20 விமானங்கள் முழுமையாக தரையிறக்கப்படவுள்ளன.
துபாய் சர்வதேச விமான நிலையத்தில் நடைபெறவுள்ள ரன்வே சீர்திருத்த பணிகள் காரணமாகவே, இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இந்த காலப்பகுதியில் விமான நிலைய ஆபரேஷன் சீராக இயங்குவதற்காக அங்கு தற்போது சேவையில் உள்ள விமான சேவைகளில் 26% சேவைகள் நிறுத்தப்பட வேணடும் என, விமான நிலைய நிர்வாகம் அறிவித்திருந்தது. அங்கிருந்து இயங்கும் பெரிய விமான நிறுவனம் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்பதால், அதிக பாதிப்பு எமிரேட்ஸூக்கே ஏற்படுகிறது.


No comments:
Post a Comment