ஏப்ரல் 24: சென்னையில் தேர்தல் நாளில் செயல்பட்டு வந்த மூன்று தனியார் ஐடி நிறுவன ஊழியர்களை வெளியேற்றிய தேர்தல் அதிகாரிகள், அந்த நிறுவனங்களை மூடிவிட்டு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் தேர்தல் நாளில் செயல்பட்டதாக 3 தனியார் ஐ.டி. நிறுவனங்கள் மீது புகார் கூறப்பட்டுள்ளது. சோழிங்கநல்லூரில் செயல்பட்டு வருகின்றன அந்த நிறுவனங்களில் பணிபுரிந்த 3,500 பேரை தேர்தல் அலுவலர்கள் வெளியேற்றினர்.
அந்த 3 ஐ.டி. நிறுவனங்களின் நுழைவு வாயில்களையும் பூட்டி தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், அரசு உத்தரவுக்கு மாறாக செயல்பட்டதாக 3 தனியார் ஐ.டி. நிறுவனங்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment