மார்ச் 09: நடைபெறக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி வடசென்னை, இராமநாதபுரம், நெல்லை ஆகிய மூன்று தொகுதிகளில் போட்டியிடுகிறது.
சென்னையில் நேற்று நடந்த எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுக்குழுவில் இந்த முடிவு எடுக்கப்பட்டு வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர்.
வடசென்னை பாராளுமன்ற தொகுதியில் நிஜாம் முகைதீன், இராமநாதபுரத்தில் நூர் ஜியாவுதீன், நெல்லையில் முபாரக் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் புதுவை உட்பட மற்ற 37 தொகுதிகளில் கட்சியின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க மாநில செயற்குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் ஃபைஸ் மஹாலில் நடைபெற்ற மாநில பொதுக் குழுவுக்கு தலைமை தாங்கிய மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி தலைமையுரையாற்றினார். மாநில பொதுச்செயலாளர் நெல்லை முபாரக் பொதுக்குழு உறுப்பினர்களை வரவேற்று பேசினார். மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் ஆண்டறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றினார்.
பொதுக்குழுவின் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய துணை தலைவர் நாஸ்னின் பேகம் தேர்தல் அரசியல் களத்தை எதிர்கொள்வது பற்றி உரையாற்றினார்.
மேலும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர்கள் அமீர் ஹம்சா, ரத்தினம், அபுதாஹிர், சத்தார், மாநில பொருளாளர் அம்ஜத் பாஷா, மாநில செயற்குழு உறுப்பினர்கள் உஸ்மான் கான், செய்யது இப்ராஹிம், வழக்கறிஞர் அப்பாஸ், எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில மகளிரணி தலைவர் பாத்திமா கனி, செயலாளர் நபீஸா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தொழிற்சங்கமான எஸ்.டி.டி.யூ வின் மாநில தலைவர் ஃபாரூக், பொதுச் செயலாளர் அஜீத் ரஹ்மான் ஆகியோரும் முன்னிலை வகித்தனர். இறுதியாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில துணைத் தலைவர் எஸ்.எம். ரஃபீக் அஹமது நன்றியுரையாற்றினார்.


No comments:
Post a Comment