முத்துப்பேட்டை பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தாக்கப்பட்ட பத்திரிக்கையாளர்கள். - BBC

BBC

Thursday, October 31

முத்துப்பேட்டை பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தாக்கப்பட்ட பத்திரிக்கையாளர்கள்.


அக்டோபர் 31: முத்துப்பேட்டை பேரூராட்சி மன்ற கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கபட்டிருந்தது அதன் அடிப்படையில் இன்று துவங்கிய மன்ற கூட்டத்தில் 1 வது வார்டு கவுன்சிலர் மாரிமுத்து முத்துப்பேட்டையில் பரவும் டெங்கு காய்ச்சலை தடுக்க வலியுறுத்தி கொசு வலையும் மன்ற கூட்டத்திற்கு வருகை தந்துள்ளார். 
இதனை புகைப்படம் எடுக்கவும், செய்திகள் சேகரிக்கவும் கூட்டம் நடக்கும் அரங்கத்திற்கு சென்ற பத்திரிக்கையாளர்கள் பிச்சுமணி (தினமலர்), முகைதீன் பிச்சை (தினகரன்), திருமுருகன் (புதிய தலைமுறை) ஆகியோரை பேரூராட்சி மன்ற தலைவர் கோ.அருணாச்சலம் தடுத்து சரமாரியாக தாக்கியுள்ளதாக தெரிகிறது. காயமுற்ற பத்திரிக்கையாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவத்தை அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து பத்திரிக்கையாளர்களை சமாதானப்படுத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறி சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதன் அடிப்படையில் பேரூராட்சி மன்ற தலைவர் கோ.அருணாச்சலம் மீது வழக்கு பதியபட்டுள்ளது. இதனால் முத்துப்பேட்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தகவல்: முத்துப்பேட்டை ரகசிய நிருபர்

No comments:

Post a Comment